முதலைக்குடா ஸ்ரீ பாலையடிப்பிள்ளையார் ஆலய அலங்கார உற்சவம்.

0
99
மட்டக்களப்பு மாவட்டத்தின் முதலைக்குடா கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பாலையடிப்பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவப்பெருவிழா நேற்று(05) புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. பூசை ஆராதனைகள் மற்றும் திருவிழாக்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று எதிர்வரும் 10.04.2017ம் திகதி திங்கட்கிழமை தீர்த்தோற்சவத்துடன் நிறைவுபெறவிருக்கின்றதாக ஆலயத்தின் பரிபாலனசபையினர் தெரிவித்தனர்.
சங்காபிசேக பூசைகள் எதிர்வரும் 09.04.2017ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 04மணிக்கும் நடைபெறவுள்ளது. உற்சவ காலங்களில் சமயற்சொற்பொழிவுகள், கூட்டுப்பிரார்த்தனை போன்றனவும் இடம்பெறவுள்ளன.
கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்தக்குருக்கள் தலைமையிலான குழுவினரால் திருவிழாக்கள், பூசைகள் நிகழ்த்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. மேலும் ஏகதந்தன் இந்து இளைஞர் அபிவிருத்திச் சங்கத்தின் 40வது ஆண்டு நிறைவையொட்டி சால்வை வெளியீடும் சனிக்கிழமை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.