யாழில் ஊடகவியலாளர்களுக்கான டிஜிட்டல் ஊடகச் செயலர்வு

0
517

ஜேர்மன் நாட்டின் ஊடக கூட்டுறவு மற்றும் மாற்றத்திற்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்களுக்கான மூன்று நாள் டிஜிட்டல் ஊடகம் தொடர்பான செயலமர்வு கடந்த 31ம் திகதியிலிருந்து இரண்டாம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கிறீன் கிறாஸ் விடுதியில் நடைபெற்றது.
இலங்கையில் உள்ள தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய ஊடகங்களில் வேலைசெய்யும் தமிழ், முஸ்லிம், சிங்கள ஊடகவியலாளர்கள், செய்தி ஆசிரியர்கள், செய்தி முகாமையாளர்கள், எழுத்தாளர்கள் இச்செயலமர்வில் கலந்து கொண்டனர்.
இதுதொடர்பான விரிவுரைகளை ஜேர்மன் நாட்டு ஊடக விரிவுரையாளர், பாஸ்கால் முல்லர் வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இன ஐக்கியத்தினை பேணும் பொருட்டும் குறித்த செயலமர்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மூன்று நாள் பயிற்சியின் பின் கலந்துகொண்ட ஊடகவியலாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டதுடன், இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்துடன் இணைந்து குறித்த செயலமர்வினை ஒழுங்குபடுத்தியிருந்தனர்.

af C8OOTWuV0AACB94