அரசாங்க பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

0
522
அரசாங்க மற்றும் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைகளுக்கான 2017 ஆம் ஆண்டின் முதலாம் தவணை கல்வி நடவடிக்கை நாளை(05)  நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
 இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 26ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இதேவேளை , முஸ்லிம் பாடசாலைகளுக்கான முதலாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் வியாழக்கிழமை நிறைவடைவதுடன் இரணடாம் தவணைக்கான கல்வி நடவடிக்கை எதிர்வரும் 19 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.