மட்டக்களப்பில் பட்டதாரிகளின் மோட்டார் சைக்கிள் பேரணி போராட்டம்

0
493
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளால் மோட்டார் சைக்கிள் பேரணி போராட்டம் நேற்று(03) திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இருந்து ஆரம்பமான மோட்டார் சைக்கிள் பவனி, பிரதானவீதியினூடாக வந்தாறுமூலையில் அமைந்துள்ள கிழக்கு பல்கலைக்கழக வாயில் முன்பு சென்று, அங்கிருந்து கல்லடி சுவாமி விபுலானந்த அழகியற் கற்கை நிறுவக வளாகத்திற்கும், தாழங்குடா தேசிய கல்வியற் கல்லூரி அமைந்துள்ள இடத்திற்கும் சென்று பின் மீண்டும் காந்தி பூங்காவை சென்றடைந்தது.
இதன் போது, மோட்டார் சைக்கிள்களில், தமது பட்டத்தின் அடையாளப்பெயரினையும், பெற்ற ஆண்டையும், எதிர்கட்சி தலைவர் ஏன் மௌனமாகவுள்ளார். எமக்கான தீர்வை வழங்கு போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளையும் காட்சிப்படுத்தியிருந்தனர்.
மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பு நேற்றுடன்(03)  42வது நாட்களாகவும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறித்த போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்று விஜயம் செய்து பட்டதாரிகளை சந்தித்து, அண்மையில் பேச்சுக்களை நடாத்தியிருந்தன. அதன்போது இரண்டு மாதத்திற்குள் தீர்வை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமென அரசாங்கம் உறுதியளித்தது. ஆனாலும் தமக்கு எழுத்துமூலம் வழங்கப்படும் பட்சத்திலேயே தமது போராட்டத்தினை நிறைவு செய்வது தொடர்பில் மீள்பரிசீலனை செய்யப்படும் எனவும் சங்கத்தலைவர் ரி.கிசாந்த் இதன்போது, தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
 17796778_1364895910237388_8212301681498132661_n
unnamed DSC05089 unnamed (1) unnamed (2) unnamed (3)