களுவாஞ்சிகுடி பொலீஸ் பிரிவில் வாகனவிபத்தில் ஒருவர் உயிரிழப்பு

0
754
accident-aக.விஜயரெத்தினம்)
பெரியகல்லாறு பிரதானவீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நண்பல் 12,45 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் கல்லாறு கடலாச்சியம்மன் ஆலயத்தின் பிரதம பூசகர் செல்லையா ஐயாண்ணாச்சி(சின்னராசா -வயது 62) சிசிச்சை பலன்றி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நள்ளிரவு உயிரிழந்துள்ளார்.

இவர் தனது மோட்டார்சைக்கிளில் பெரியகல்லாறு பிரதான வீதியை கடக்க முற்பட்டவேளையில் வீதியில் வேகமாக பயணித்த மோட்டார்சைக்கிளுடன் மோதியுள்ளார்.இவ்விபத்தில் காயமடைந்த பெரியகல்லாறு பிரதம பூசகரை பொதுமக்களின் உதவியுடன் கல்லாறு மாவட்ட வைத்தியசாலையில் சேர்த்து அங்கிருந்து மேலதிக சிசிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டார்.இவ்வாறான நிலையில் சிசிச்சை பலனின்றி பூசகர் உயிரிழந்துள்ளார்..
இதேவேளை களுவாஞ்சிகுடி மணல் வீதியில் நேற்று  பிற்பகல்  இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர்  படுகாயமடைந்துள்ளார்.களுவாஞ்சிகுடி பொலீஸ் பிரிவுக்குட்பட்ட களுவாஞ்சிகுடி மணல்வீதியில் நேற்று (2.4.2017) ஞாயிற்றுக்கிழமை  பிற்பகல் 1.43 மணியளவில் இடம்பெற்ற விபத்திலே களுதாவளை நான்காம்   குறிச்சியை சேர்ந்த தங்கவேல் குகன் (26 வயது)என்பரே படுகாயமடைந்துள்ளார்.
படுகாயமடைந்த நிலையில் வீதியில் விழுந்து காணப்பட்ட நபரை  பொதுமக்களின் உதவியுடன்  தூக்கிக்கொண்டு களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு முச்சக்கரவண்டியின்  உதவியுடன் ஏற்றிக்கொண்டு அனுமதித்தனர்.
கை,கால்,நெஞ்சுப் பகுதியில் காயங்கள் ஏற்பட்டுள்ளது.மேலதிக சிசிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.இந்த விபத்துக்கான காரணம் வீதியில் உள்ள பாரிய மடுவாகும். ஒன்று அல்லது ஒன்றரையடி உயரமானதும், அகலமான குழியே காரணமாகும்.மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்கு உரித்தான இவ்வீதியாகும்.குன்றும் குழியுமான பாதையை அண்மையில் கொங்கிறீட் வீதியாக புனரமைக்கப்பட்டுள்ளது.
  இவ்மணல் வீதியானது  முழுமையாக போடப்படவில்லை.கல்முனை – மட்டக்களப்பு நெடுஞ்சாலை வீதியில் களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் சிலையில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு தென்மேற்குப்புறமாக செல்கின்றது.முழுமையாக இவ்வீதியை  பூரணப்படுத்த முடியாததால் ஏற்றஇறக்கம் போல் வீதி காணப்படுகின்றது. வீதியில் புதிதாக  பயணிக்கும் பாதசாரிகளுக்கு வீதியின் நிலை தெரியாது.இதனால் வீதியில் உள்ள பள்ளத்தில்  மாட்டிக்கொள்கின்றார்கள்.இதனாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.இதேவேளை ஓந்தாச்சிமடம் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட வேளையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.இதுசம்பந்தமாக களுவாஞ்சிகுடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.