28 ஆவது நாளாக தொடரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம்

0
356

28 ஆவது நாளாக தொடரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம்  

 காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துவரும் போராட்டம் இன்றுடன் இருபத்தெட்டாவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் இடம்பெற்ற யுத்தகாலத்தில் கடத்தப்பட்டு காணாமல் போகச்செயப்பட்டவர்கள்  இறுதிக்கட்ட யுத்தத்தில் இராணுவத்திடம் சரணடைந்த நிலையில் காணாமல் போகச்செயப்பட்டவர்கள் என  தமது உறவுகள் தொடர்பில் அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது..

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கூடாரம் அமைத்துள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின்  உறவுகள்  தொடர்  போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்mullaithivu-a mullaithivu-b