வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் .ஜனாதிபதி

0
394

mythiri srisena-aவேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்..

திருகோணமலையில் நடைபெறும் ‘யொவுன்புர 2017’ நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த உறுதி மொழியை அளித்துள்ளார். கடந்த காலங்களில் எவ்வித கொள்கைகளும் இன்றி பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளன. அதனாலேயே தற்போது வேலையற்ற பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்க காரணம் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இந்தநிலையில், நல்லாட்சியின் கீழ் முறையான கொள்கைகள்இ, வேலைத்திட்டங்களின் அடிப்படையில் பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பு பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்

hirunews