கந்தலிங்கம் சத்தியநாதனுக்கு சேவை நலன் பாராட்டு விழாவும் சத்திய நாதம் சிறப்பு மலர் வெளியீடும்

0
691

மட்டக்களப்பு மேற்கு முன்னாள் வலக்கல்விப் பணிப்பாளர் கந்தலிங்கம் சத்தியநாதனுக்கு சேவை நலன் பாராட்டும் விழாவும் சத்திய நாதம் சிறப்பு மலர் நூல் வெளியீட்டு நிகழ்வு இன்று (2) ஞாயிற்றுக்கிழமை சித்தாண்டி இராம கிருஸ்ண வித்தியாலயத்தில் வைத்தியர் ஆர்.நவலோஜிதன் தலைமையில் இடம்பெற்றது.

நடைபெற்ற சேவை நலன் பாராட்டு நிகழ்வில் பாராட்டு கௌரவிப்பை கவிஞர் கலாபூஷணம் பொன்.தவநாயகம் வழங்கி வைத்ததுடன், சத்திய நாதம் நூலினை விழாக்குழுவின் தலைவர் வைத்தியர் இ.நவலோஜிதனினால் மட்டக்களப்பு மேற்கு முன்னாள் வலக்கல்விப் பணிப்பாளர் கந்தலிங்கம் சத்தியநாதனுக்கு வழங்கி வைத்தார்..

இந் நிகழ்வுக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜாசிங்கம், செங்கலடி பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர், கல்குடா கல்வி வலய பிராதிக் கல்விப் பணிப்பாளர் தினகரன் ரவி, செங்கலடி சுகாதார வைத்தியர் ஈ.சிறிநாத், பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் சித்தாண்டி பொது மக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

சத்திய நாதம் நூல் வெளியீட்டுரையை கவிஞர் கலாபூஷணம் பொன்.தவநாயகம் வழங்கி வைத்ததுடன் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.sathiyanathan-a sathiyanathan-b sathiyanathan-c sathiyanathan-d sathiyanathan-e