சிசு கொலை யுவதியை தேடும் மட்டக்களப்பு பொலீஸ்

0
1435

body-aபெற்ற சிசுவை கல்லுடன் கட்டி கிணற்றில் போட்ட சம்பவம் தொடர்பாகத் தேடப்பட்டு வரும் துறைநீலாவணை 05. ஐ சேர்ந்த வெற்றிவேல் கிருஸ்ணகுமாரி தொடர்பான தகவல் கிடைத்தால் அருகிலுள்ள பொலீஸ் நிலையத்துடன் தயவு செய்து தொடர்பு கொள்ளுங்கள். .44/1 மேல் மாடி வீதி. மட்டக்களப்பு எனும் முகவரியில் வாடகைக்குக் குடியிருக்கும் ஒருவரின் வீட்டில் வீட்டுப் பணிப்பெண்னாக வேலை செய்யும் மேற்படி பெண் ஆண் சிசுவை வீட்டில் யாரும் இல்லாத நிலையில் பெற்றெடுத்து துணி மற்றும் உரப்பையுடன் கல்லையும் கட்டி வீட்டு கிணற்றில் போட்டு தலைமறைவாகிவிட்டார்.

குளிக்கும் தண்ணீரில் இரு தினங்களாக துர்நாற்றம் வீசவே கிணற்றைத் துப்புரவு செய்யும் போது காணப்பட்டஉரப்பையை பார்த்த போது உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டது.

இது தொடர்பாக விசாரணை மட்டக்களப்பு பொலீஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளார்.

இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றுள்ளது.