October 22, 2017
You can use WP menu builder to build menus

Graduates Batticaloaகிழக்கு மாகாணம் கடந்த 30 வருடங்களுக்கு மேல் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வந்தமை அனைவரும் அறிந்த விடயமே எனவே இங்கு உள்ள இளைஞர்களும் யுவதிகளும் மிகவும் சிரமத்தின் மத்தியில் இடைவிட்ட நிலையில் இருந்த கற்கைகளை மேற்கொண்டு தங்களின் பட்டப்படிப்புக்களை முடித்துள்ளனர்.
இவ்வாறு உள்ள நிலையில் பட்டதாரிகள் பலமுறை அரச நியமனங்களில் இணைத்துக் கொள்ளப்படுவர் என கூறி பலதரப்பட்ட மட்டங்களால் ஏமாற்றப்பட்டுள்ளனர். 2015இல் இடம்பெற்ற வேலையில்லாப் பட்டதாரிகளுக்கான ஆர்ப்பாட்டத்திற்கு வந்து அதனை முடிவுக்கு கொண்டு வந்த கிழக்குமாகாண முதலமைச்சர் 2015 பங்குனி மாதத்திற்கு இடையில் அனைத்து பட்டதாரிகளையும் அரச நியமனங்களில் உள்வாங்குவதாக உறுதியளித்திருந்தார். ஒரு வருடங்கள் முடியவுள்ள நிலையிலும் இதுவரை அனைத்து பட்டதாரிகளும் அரச நியமனங்களில் உள்வாங்கப்படவில்லை.
இதே போல் கடந்த வருடம் எமது நாட்டின் மதிப்புக்குரிய பிரதமர் கூட, பட்டதாரிகள் தங்களின் பட்டப்படிப்பினை முடித்த அதே வருடமே அவர்கள் அரச நியமனங்களில் இணைக்கப்படுவர் என பகிரங்கமாக கூறினார். அத்துடன் பட்டதாரிகளின் வயதெல்லை 45 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் மாகாண மட்டத்தில் நிலவும் ஆசிரியர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிகளுக்கான இடைவெளிகளை கண்டறிந்து அதனை அறிக்கையிடுமாறு ஒரு குழு நியமிக்கப்பட்டிருந்ததுடன் பட்டதாரிகளை இணைத்துக் கொள்ளுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டதாக பட்டதாரிகள் சங்கத்திடமும் உறுதியளித்திருந்தார்.
ஏன்ன நடந்தது! பட்டதாரிகள் ஏமாற்றப்பட்டு அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது.
வட மாகாணம், மத்திய மாகாணம், வடமேல் மாகாணம் போன்ற மாகாணங்கள் போட்டி பரீட்சைக்கான வயதெல்லையினை 45 ஆக்கியுள்ளது. ஆனால் கிழக்கு மாகாணம் மாத்திரம் அறிவித்திருந்ததே தவிர எவ்வித போட்டி பரீட்சைகளுக்கும் வயதெல்லையினை 35க்கு மேல் அதிகரிக்கவில்லை. தொடர்ந்து 35 தொடக்கம் 45 வயது வரை உள்ள பட்டதாரிகளின் நிலை எவ்வாறு அமைய உள்ளது.
நல்லாட்சி அரசாங்கத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களோ மாகாணசபை உறுப்பினர்களோ மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் இது பற்றி பாராளுமன்றத்திலும் மாகாண சபையிலும் பேசி தங்களுக்கு வாக்களித்த தொகுதி மக்களின் பிரச்சினைகள் பற்றி தீர்மானம் எடுத்து கொடுப்பதற்கு நேரம் இல்லாமல் மக்களை திரட்டி மர்மமாக உள்ள பிரச்சினைகளை பூதாகரம் ஆக்குகின்றனர். நல்லாட்சி அரசாங்கம் இவ்வாறான பிரச்சினைகளை அறிந்து தீர்க்கத் தாமதிக்கும் பட்சத்தில் மீண்டும் ஒரு வன்முறைக் கலாச்சாரம் தோன்றலாம். புடித்த இளைஞர், யுவதிகளின் ஆளுமைகள் முழுக்க நாட்டின் அபிவிருத்தி மற்றும் வளர்ச்சிக்கு பயன்பட வேண்டும் மாறாகும் பட்சத்தில் வன்முறையாகும் என்பது யதார்த்தம்.
வயதெல்லை 45 ஐ தாண்டினால் பட்டதாரிகளின் படிப்பு கேள்விக்குறியாகிவிடும்மேலும் அரசாங்கம் போட்டி பரீட்சை என்ற போர்வையில் படித்த இளைஞர் யுவதிகளின் பணம், நேரத்தினையும் சுரண்டி வருகின்றது இவ்வாறான பொறுப்பற்ற சம்பவங்களால் பட்டதாரிகள் ஏமாற்றப்பட்டு அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டே வருகிறது.

Comments are closed.