November 20, 2017
You can use WP menu builder to build menus

theroddam-aமட்டக்களப்பு மாவட்டத்தில் பிரசித்திபெற்ற கொக்கட்டிச்சோலை சிவன் கோயில் திருவிழாக்கள் தற்போது மிகவும் சிறப்பாக நடைபெற்றுவருகின்றது. தேரோட்டம் என மாவட்டமக்களால் அழைக்கப்படும் சிறப்பு எந்தமாவட்டத்துக்கும் இல்லை கொடியேற்றம் தொடங்கி விட்டால் மாவட்டத்தின் பலபாகங்களிலிருந்தும் பெருந்திரளான மக்கள் இரவுபகலாக ஆலய வழிபாட்டில் ஈடுபடுவார்கள்.
தேரோட்டத்திருவிழா காலப்பகுதியில் மட்டக்களப்பு நகரில் மாவட்டத்தை மையப்படுத்தி மூன்று தினங்கள்முத்தமிழ் விழா நடைபெற தமிழ்மக்கள் பேரவை ஏற்பாடு செய்துள்ளமை இவர்கள் சிவன் கோயில் திருவிழாக்களை கணக்கில் எடுக்கவில்லையா அல்லது ஏற்பாட்டாளர்களின் கவலையினமா என்கின்ற சந்தேகம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது .
மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரமாண்டமான முறையில் குடிவழக்கின் படி சிவன் கோயிலில் திருவிழாக்கள் நடைபெற்றுவரும் வேளையில் மட்டக்களப்பின் பாரம்பரியத்தை பேணிவரும் நாம் தங்கள் தங்கள் குடித்திருவிழாக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது வழமை.இந்த முக்கியத்துவங்களை பேரவை கவனத்தில ஏடுக்கவில்லையா என்ற எண்ணமும் மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.;

Comments are closed.