November 20, 2017
You can use WP menu builder to build menus

இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் சொத்துக்கள் அனைத்தையும் தவறான வழியில் தன்னிச்சையான தவறாக பயன்படுத்திவரும் பொதுச் செயலாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் ஆசிரியர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

சங்கத்தின் பொதுச் செயலாளர் அண்மைக்காலமாக அவரது மனம் போன போக்கில் அதிகார தோரணையில் தன்னிச்சையாக, ஆசிரியர்களை மடயர்கள் எனும் நோக்குடன் செயற்பட்டு வருகின்றார். இதன் ஒருகட்டமாக பதவி மோகத்தில் சங்கத்தின் பெயரினை பாவித்து தேர்தலில் இறங்கியிருத்தார். என்பதனை அனைத்து ஆசிரியர்களும் அறிவார்கள்.

அது மாத்திரமின்றி சங்கத்திற்கு வழங்கப்பட்ட ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பெறுமதியான அதிசொகுசு மொன்றிரோ வானத்தை அவரது பெயரில் பதிவு செய்து கொண்டு தனது சொந்த வேலைகளை பார்த்து வருகின்றார். சங்கத்தின் கணக்குகளை பொருளார், தலைவரின் அனுமதியின்றி கையாண்டு வருகின்றார்,

இதேபோன்று சர்வதேச கல்வியகத்தினால் வழங்கப்பபடும் லட்சக்கணக்கான நிதியினையும் இவரே கையாண்டு வருகின்றார். இதற்கான கணக்குகள் எதும் இதுவரை எந்தவித கூட்டத்திலும் முன்வைக்க வில்லை வாகனத்தினை பாவிப்பது சம்பந்தமான எந்தவிதமான அறிக்கைகளும் காண்பிக்கப்பட்டதில்லை, சங்கத்தின் பெயரில் வெளிநாடுகளுக்கும் அடிக்கடி சென்று வருகின்றார். எமது சங்கத்தின் பெயரினை பாவித்து வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் மக்களிடம் பணம் அறவீடு மேற்கொண்டதாகவும் அறியக்கிடைக்கின்றது.

சந்தாப்பணத்தினை வழங்கும் ஆசிரியர்களுக்கு இதுவரைக்கும் எந்தவிதமான நலன்புரி விடயங்கள் ஏதும் மேற் கொள்ளப்படவில்லை. மாறாக மஹிந்த ஆட்சிக்காலத்தில் ஆசிரியர்களின் சம்பள உயர்ச்சிக்காக அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து போராடியபோது முன்னாள் யாழ்மாவட்ட அமைச்சர் ஒருவரின் வேண்டு கோளுக்கு இணங்க அந்த போராட்டத்தில் இணைந்து கொள்வதை தவிர்த்துக் கொண்டார். இவ்வாறான செயலாளர் மீது பலதரப்பட்ட முறைப்பாடுகளை நிருவாகத்தினரிடம் முன்வைத்தபோதும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இது எங்களால் விடுக்கப்படும் இறுதி வேண்டுகோள், இதற்கு நடவடிக்கை எடுக்கத்தவறும் பட்சத்தில் பாடசாலை ரீதியாக சென்று இவருக்கு எதிரான கையெழுத்து வேட்டை எடுக்க வேண்டியேற்படும் இது சங்கத்திற்கு எதிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இவற்றினை தடுப்பதற்கு செயலாருக்கு எதிராக உடன் நடவடிக்கை எடுக்குமாறு ஆசிரியர்கள் கோரி நிற்கின்றனர்.

Comments are closed.