பிரதானசெய்திகள்

25பேருக்கு திறமைக்கான விருது

லக்ஸ்டோ மீடியா நெட்வேர்க்,  தமிழ் எழுத்தாளர் சங்கம் இணைந்து நடாத்திய திறமைக்கான விருது வழங்கும் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தினைச் சேர்ந்த 25பேருக்கு திறமைக்கான விருது அண்மையில் வழங்கி வைக்கப்பட்டது. ஆரையூர் அருள் உள்ளிட்ட மண்முனை...

இலங்கை அரசு அதிகாரங்களைப் பறித்துவிட்டு பெயரளவில் மாகாணசபையினை நடாத்திவருவகிறது: சரவணபவன்

இலங்கை அரசு அதிகாரங்களைப் பறித்துவிட்டு பெயரளவில் மாகாணசபையினை நடாத்திவருவகிறது என மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடம் தெரிவித்தார் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் இன்று (11) மட்டக்களப்பு மாநகர சபைக்கான விஜயமொன்றினை மேற்கொண்ட...

தமிழ் தேசியகூட்டமைப்பை பலப்படுத்துவதிலேயே  கிழக்கு தமிழர் ஒற்றுமைதங்கியுள்ளது!

கிழக்கு தமிழர் ஒன்றியம் மூன்றாக பிரிந்துள்ள நிலையில் தமிழ்தேசிய கூட்டமைப்பு பொதுச்சின்னத்தில்கிழக்கில் தேர்தலில் போட்டியிடவேண்டும் என கேட்பது வேடிக்கையான விடயம் எனக்கூறினார் மட்டக்களப்புமாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சி தலைவருமானபா.அரியநேத்திரன். தமிழ்தேசிய கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் ஒரு பொதுச்சின்னத்தில் தேர்தலில் போட்டியிடமுன்வரவேண்டும் என கிழக்கு தமிழர் ஒன்றியத்தலைவர் சட்டத்தரணி சிவநாதன் ஊடகங்களில் கூறிய கருத்து  தொடர்பாக அரியநேத்திரனிடம் கேட்டபோது  மேலும் கூறியதாவது. ஒற்றுமையாக தமிழ்தேசிய கூட்டமைப்பில் அனைவரும் இணைந்து தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதில்மாற்றுக்கருத்துக்கள் இல்லை. ஒற்றுமை என்றும் கிழக்கு தமிழர் என்றும் வடக்கு தமிழர் என்றும் இரண்டாக கூறுபோட்டு பிரதேசவாதஅரசியலை கைவிட்டு வடக்குகிழக்கு என்ற பரந்துபட்ட ஒரு ஒற்றுமையாக அனைத்துக்கட்சிகளும்ஒன்றினைவதே தமிழர்களின் அரசியல் பலத்துக்கான சாத்தியமாக அமையும். கிழக்கு தமிழர் ஒன்றியம் ஆரம்பிக்கும் போது அந்த அமைப்பில் முக்கிய பதவிகளில் இருந்த பேராசிரியர்செல்வராசா தற்போது ஜக்கிய தேசிய கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளராக செயல்பட்டு தற்போதுபுதிய கட்சியான தமிழர் ஐக்கிய முன்னணி என்ற கட்சியை ஆரம்பித்துள்ளார் அதன் தேசிய அமைப்பாளராகபேராசிரியர் செல்வராசா இணைந்துள்ளார். அடுத்தவர் கோபாலகிருஷ்ணன் என்ற தமிழர் மகாசபை கட்சி செயலாளராக இருந்து கிழக்கு தமிழர்ஒன்றியத்தை ஆரம்பித்தவர் அவர் தற்போது பிரிந்து கிழக்கு தமிழர் கூட்டமைப்பு எனும் புதிய கட்சியைஆரம்பித்துள்ளார். கிழக்கு தமிழர் ஒன்றியம் இவ்வாறு மூன்று கூறாக பிரிந்து தனித்தனியாக புதிய பெயர்களில் கட்சிகளைஆரம்பித்துள்ள நிலையில் அவர்களில் இருந்து பிரிந்து சென்ற மூன்றுகட்சிகளை முதலில் ஒன்றாக ஒருபொதுச்சின்னத்தில் போட்டியிட முடியாத நிலையில் தமிழ்தேசியகூட்டமைப்புக்கு கிழக்கு தமிழர் ஒன்றியம்எப்படி அழைப்புக்கொடுக்கமுடியும். இதைவிட மழைக்கு காளான் முளைப்பதைபொல் இன்னும் பல கட்சிகள் மட்டக்களப்பில் முளைத்துள்ளன அந்தகட்சிகள் அனைத்தையும் ஒரு குடையின் கீழ் முதலில் கொண்டுவருவதற்கான முயற்சியை செய்துவிட்டு அதில்வெற்றிகண்டுவிட்டு அதன் பின் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு அழைப்பு கொடுப்பது ஒரளவு பொருத்தமாகஇருக்கும் அழைப்பு கொடுப்பவர்கள் தமிழ்தேசிய கூட்டமைப்பின் கொள்கை கோட்பாடுகளை பற்றி ஏளனமாகஏற்கனவே ஊடகங்களில் விமசனம் செய்துவிட்டு உள்ளத்தால் தமிழ்தேசிய கூட்டமைப்பை குற்றம் சுமத்திபேசிவிட்டு உதட்டால் ஒற்றுமை பொதுச்சின்னம் என்ற வார்த்தைகளை கூறுவது எந்தவகையில் பொருந்தும். தமிழ்தேசியகூட்டமைப்பு வடக்கில் ஒருசின்னத்திலும் கிழக்கில் வேறொரு சின்னத்திலும் எந்த தேர்தலிலும்இதுவரை போட்டியிடவும் இல்லை இனியும் அப்படி போட்டியிடவேண்டிய தேவையும் எழாது. முடிந்தால் கிழக்குதமிழர் வடக்குதமிழர் என்று தமிழர்களை பிரித்து பிரதேசவாத அரசியலை விட்டுவடக்குகிழக்கு தமிழ்மக்கள் என்ற எண்ணப்பாட்டுடன் ஒற்றுமையாக தமிழ்தேசிய கூட்டமைப்புடன் இணைந்துபொதுச்சின்னத்தை விட்டு வீட்டுச்சின்னத்தில் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக சிந்திப்பதேநல்லது. தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆரம்பித்து  2001, ம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை 19, வருடங்களாக 4, பொதுத்தேர்தல்கள்,2, மாகாணசபைதேர்தல்கள், வடக்கு கிழக்கில் இடம்பெற்ற  அனைத்து உள்ளுராட்சிநகரசபை மாநகரசபை தேர்தல்கள் அனைத்திலும் தமிழ்தேசிய கூட்டமைப்பு வடக்கில் ஒரு சின்னம் கிழக்கில்வேறு சின்னம் என பிரித்து கேட்கவில்லை இலங்கை தமிழரசு கட்சியான வீட்டு சின்னத்திலேயே தேர்தல்களைஎதிர்கொண்டோம் அவ்வாறான நிலைப்பாடுதான் எதிர்வரும் பொதுத்தேர்தல் மாகாணசபை தேர்தல்கள்எல்லாம் தமிழ்தேசிய கூட்டமைப்பு போட்டியிடும். தேர்தல்காலத்து ஒற்றுமையை என்பதைவிட தமிழ் மக்களுக்கான திரந்தர ஒற்றுமை பற்றி சிந்திக்கவேண்டியநிலை எமக்கு உண்டு, தேர்தல் விளம்பரத்துக்காக ஒற்றுமை என்ற சொல், ஒருகுடை என்றசொல்,கிழக்குதமிழர் என்றசொல், மாற்றுத்தலைமை என்ற சொல் பலராலும் உச்சரிக்கப்படுவது வழமையான அரசியல் தமிழ்தேசிய கூட்டமைப்புஎந்த நோக்கத்துக்காக ஆரம்பிக்கப்பட்டதோ அந்த நோக்கம் அடையும் வரை அதன்பயணம் தொடரும்பயணங்கள் செல்லும் பாதைகளில் தடைகள் தாமதங்கள் வரலாம் அதற்காக நோக்கத்தை கைவிட்டுசந்தர்பவாத அரசியல் செய்ய முடியாது, அபிவிருத்தி அன்றாடதேவை என்பதை பெற்றுக்கொள்வதற்கானஅரசியலுடன் தமிழ்மக்களின் அபிலாஷைகளையும் பெற றுக்கொள்ளவேண்டிய தேவை உண்டு எனவேதமிழ்தேசிய கூட்டமைப்பு அபிவிருத்தி வேலைவாய்ப்பு பொருளாதாரமேம்பாடு இவைகளுடன் அரசியல் தீர்வைபெறும் விடயங்களையும் இணைத்துத்தான் அரசியல்பணிகளை செய்யமுடியும் அரசியல் தீர்வை கைவிட்டுதனியாக அபிவிருத்தியை மட்டும் கொள்கையாக கொண்டு நாம் அரசியல் பணி செய்யப்போவதில்லை என்பதைஅனைவரும் புரிதல் நல்லது. தமிழ்தேசிய கூட்டமைப்பு பொதுச்சின்னத்தில் ஒன்றுணையுமாறு வேண்டுகோள் கொடுப்பவர்கள் தமிழ்தேசியகூட்டமைப்பை பலப்படுத்த ஒன்றிணைவதே இன்றயதேவை. தற்போது வடமகாணத்தில் விக்கினேஷ்வரன் ஐயா தமிழ்மக்கள் தேசிய கூட்டணி என்ற பெயரில் புதிய கட்சியைஇன்று 09/02/2020, ஆரம்பித்துள்ளார் இந்த கட்சி இப்பதான் ஒருநாள் குழந்தை இந்த குழந்தை தவண்டுவளர்ந்து தடந்து சிறுவராகி மாணவராகி இளைஞராகி பெரியவராக இன்னும் எத்தனை வருடங்கள் எடுக்கும், ஏற்கனவே வளர்ச்சிபெற்று பல தேர்தல்களில் ஜனநாயக அங்கீகாரம் பெற்றுள்ள தமிழ்தேசிய கூட்டமைப்பின்இடத்தை பிடிக்கவோ அல்லது மாற்றீடான கட்சியாக பரினாம வளர்ச்சிபெறவோ பல காலம் எடுக்கும் என்பதேஜதார்தம். இதுபோன்றுதான் கிழக்கில் பல கட்சிகள் திருவிழா காலத்து முட்டய் கடைகளை போன்று இன்னும் புதிய புதியபெயர்களில் கட்சி கடைகள் திறக்கப்படால் அவை அனைத்தும் மக்கள் மத்தியில் இடம்பிடிக்காது. கோயில் வீதியில் அல்லது பஷ்தரிப்பு நிலையங்களில் பொதுச்சந்தைகளில் துண்டுப்பிரசுரங்கள்வினியோகிப்பதால் மட்டும் ஒற்றுமை  ஏற்படும் என கருதமுடியாது  எனவும் மேலும் கூறினார்.

ஒன்லைன் மூலம் பரீட்சை விண்ணப்பங்கள்

பரீட்சைத் திணைக்களத்தின் பாடசாலைகளுக்கான சகல பரீட்சைகளுக்கும் உரிய விண்ணப்பங்களை விண்ணப்பிக்கும் முறை அடுத்த வருடம் முதல் ஒன்லைன் முறையின் கீழ் இடம்பெறவுள்ளது. தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையிலிருந்து இந்த முறைமையை பின்பற்றுவது நோகக்கமாகும் என்று...

கிழக்கில் பாடசாலை மாணவர்களுக்கு சிறந்த தலைமைத்துவத்தைப் பெற்றுக் கொடுக்க பொலிசார் நடவடிக்கை

கிழக்கில் பாடசாலை மாணவர்களுக்கு சிறந்த தலைமைத்துவத்தைப் பெற்றுக் கொடுக்க பொலிசார் நடவடிக்கை எதிர்கால சந்ததியினரை ஒழுக்கநெறிஉள்ள சிறந்த தலைவர்களை உருவாக்கும் நோக்கில் பொலிஸ் திணைக்களம் நாடெங்கும் பாடசாலைகளில் பொலிஸ் மாணவர் சிப்பாய் படை அணிகளை...

உரமானியத்தை சீராக வினியோகிக்க மட்டக்களப்பில் உரச் செயலகம் துரிதநடவடிக்கை

விவசாயிகளுக்கு அரசின் உரமானியத்தை சீராக வினியோகிக்க மட்டக்களப்பில் உரச் செயலகம் துரிதநடவடிக்கை புதிய அரசாங்கத்தின் உரமானியகொள்கை திட்டத்திற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் 2020 சிறுபோகத்தின் சிறுபோகபயிர்ச் செய்கையின் போதுபயன்படுத்தவிருக்கும் மானிய உதவியிலான உரவினியோக இலக்கினை பரிசீலிக்கும்...

கொத்தியாபுலை பாடசாலை முன்பு அதிபர், ஆசிரியர் நீக்ககோரி ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் வவுணதீவு, கொத்தியாபுலை கலைவாணி வித்தியாலயம் முன்பாக இன்று (12) காலை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. பாடசாலையின் அதிபரையும் ஆசிரியர் ஒருவரையும் நீக்குமாறு கோரியும் பாடசாலையில் இயங்கிவரும் உயர்தரப் பிரிவை நீக்குவதற்கு...

அரசாங்கத்தின் செயற்பாட்டில் தனிப்பட்ட நபர்கள் தலையிட வேண்டாம்: ஜனாதிபதி உத்தரவு

அரசாங்கத்தின் செயற்பாடுகளில் பிரதமர் மற்றும் அமைச்சர்களின் தனிப்பட்ட செயலாளர்கள், மக்கள் தொடர்பு அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் தலையீடு செய்வதை நிறுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளரால் அனைத்து அமைச்சுகள் மற்றும் செயலகங்களுக்கு 07...

வீதிச் சுவர்களில் சித்திரம் வரைந்த இளைஞர்களை பாராட்டும் விருது விழா

வீதிச் சுவர்களின் மீது சித்திரங்களை வரைந்த இளைஞர்களை பாராட்டும் முகமாக விருது வழங்கும் வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுற்றாடல் மற்றும் வன பரிபாலன அமைச்சினால் இந்த இளைஞர்களுக்கான விருது வழங்கும் வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது....

2 வார காலத்திற்குள் அரசாங்க வைத்தியசாலைகளில் வாகன அனுமதி பத்திரத்துக்கான பரிசோதனை வசதி

இலகு வாகன சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ளும் போது தேவையான வைத்திய பரிரோதனையை அரசாங்க வைத்தியசாலைகளில் மேற்கொள்வதற்காக வசதிகள் இரண்டு வாரத்திற்குள் ஆரம்பிக்கப்படும் என்று போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. இராஜாங்க அமைச்சர் திலும்...

தான்தோன்றிஸ்வரர் ஆலயத்தில் ஆயிரக்கணக்கானோருக்கு புதிர் வழங்கி வைப்பு

கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றிஸ்வரர் ஆலயத்தில் நேற்று(8) சனிக்கிழமை ஆயிரக்கணக்கானோருக்கு புதிர் நெல் வழங்கி வைக்கப்பட்டது. தைப்பூச நாளில் இறைவனுக்கும் புதிர் பிரசாதம் படைக்கப்பட்டு,  விசேட பூசையும் நடைபெற்றதை தொடர்ந்து ஆலயத்திற்கு புதிர் பெற வருகைதந்த...

மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகளால் கவனயீர்ப்பு

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள், மட்டக்களப்பில் இன்று (09) கவனயீர்ப்புப் போராட்டமொன்றை மேற்கொண்டனர். பொதுத் தேர்தலுக்கு முன்பாக வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனங்களை வழங்கக் கோரியும் பட்டதாரிகள் நியமன வயதெல்லையை 35 மேல் உயர்த்துமாறு கோரியுமே,...