பிரதானசெய்திகள்

ஏறாவூரில் “ஒசுசல” கிளை மற்றும் ஆதார வைத்தியசாலைக்கு வைத்தியர் விடுதி

ஏறாவூரில் "ஒசுசல" கிளை மற்றும் ஆதார வைத்தியசாலைக்கு வைத்தியர் விடுதி பிரதி அமைச்சர் அலி சாஹிர் மௌலானா வின் கோரிக்கை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவால் ஏற்பு-  அடுத்த மாதம் நேரில் விஜயம் செய்வார். ஏறாவூர் பிரதேசத்தில்...

அனுமதிப்;பத்திரமின்றி மாடு ஏற்றி சென்ற வாகனம் விபத்து. கடமையில் காவல்துறையினர்

அனுமதிப்பத்திரமின்றி மாடு ஏற்றி சென்ற வாகனம் விபத்துக்குள்ளான சம்பவம் அண்மையில் கொக்கட்டிச்சோலை பிரதான வீதியில் இடம் பெற்றது. மணல்பிட்டி வழியூடாக செல்லும் கொக்கட்டிச்சோலை பிரதான வீதியில் மைதானத்துக்கு அருகில் அனுமதிப்பத்திரங்களின்றி வாகனத்தில் மாடு ஏற்றி...

அரசாங்கத்துக்கான அனைத்து ஆதரவுகளையும் நாங்கள் வாபஸ் பெறவேண்டிய நிலையேற்படும்

நல்லாட்சி அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அனைத்து ஆதரவுகளையும் நாங்கள் வாபஸ் பெறவேண்டிய நிலையேற்படும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட வவுணதீவு...

மாகாணத்தில் சாதித்த பன்சேனை : மூன்று வருடங்கள் தொடர் சாதனை

(படுவான் பாலகன்) கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப்பட்ட பெண்களுக்கான காற்பந்தாட்டப் போட்டியில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பன்சேனை பாரி வித்தியாலய அணியினர் முதலிடத்தினை பெற்று சாதனை படைத்துள்ளதாக வித்தியாலயத்தின் அதிபர் செ.ஜமுனாகரன்...

காலையில் மாணவர்களும் இரவில் யானைகளும் விளையாடும் ஆபத்தான மைதானம்

— படுவான் பாலகன் —- சாதிக்கத் துடிக்கும் நாற்பதுவட்டை மாணவர்களுக்கு கரம் கொடுக்கப்போகும் உள்ளங்கள் யார்? காலையில் மாணவர்களுக்கான விளையாட்டு மைதானத்தில் இரவில் விளையாடுவது யானைகள். இதுதான் நாற்பதுவட்டை மாணவர்களின் நிலை. விளையாடுவதற்கு ஆர்வமிருந்தாலும், வலய மட்டங்களில்...

கிராம உத்தியோகத்தர் மூலம் நிவாரண அட்டை வழங்கப்பட்டு மண்ணெண்ணை விநியோகம்

மண்ணெண்ணை உள்ளிட்ட எரிபொருட்களின் விலை நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கபட்டுள்ளன. மண்ணெண்ணை 1 லீற்றர் 57 ரூபாவினால் அதிகரிக்கப்பட்ட போதிலும் சமுர்த்தி பயனாளிகள் கடற்றொழிலாளிகள் மற்றும் பெருந்தோட்டதொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் இவர்களுக்கு முன்னைய...

இளஞ்செழியன் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதியாக மாற்றம்

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கை நடத்தி முடித்த தீர்ப்பாயத்தின் (ட்ரயல் அட் பார்) மேல் நீதிமன்ற நீதிபதிகள் பாலேந்திரன் சசிமகேந்திரன், அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகிய மூவருக்கும் நீதிச்...

வாகனேரியில் யானை தாக்கி மூன்று பிள்ளைகளின் தந்தை பலி

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வாகனேரி பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு யானை தாக்கி மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார். வாகனேரி...

வாகனேரியில் யானை தாக்கி இதுவரையில் 25 பேர் மரணம்! ஆர்பாட்டத்தில் மக்கள் ஆதங்கம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வாகனேரி பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு யானை தாக்கி மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வெள்ளிக்கிழமை கவனஈர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. வாகனேரி...

பிரதியமைச்சராக பதவியேற்றார் பா.உ அலி சாஹிா் மௌலானா படங்கள்.

தேசிய நல்லிணக்க சகவாழ்வு மொழிகள் அபிவிருத்தி பிரதியமைச்சராக மட்டக்களப்பு மாவட்ட முஸ்லீம் காங்கிரஸ் பா.உ அலி சாஹிா் மௌலானா இன்று (10) நரேகேன்பிட்டி நாவலையில் உள்ள சகவாழ்வு நல்லிணக்க அமைச்சில் கடமைகளை பொறுப்பேற்றுக்...

கிழக்கு மாகாணத்திலுள்ள சுகாதாரத்துறை இனரீதியாக பாதிக்கப்படுவதை தடுத்து நிறுத்துங்கள்.

மாகாணசபை வைத்தியசாலையை மத்திய அரசிற்கு வழங்குவதற்கு ஆளுனருக்கு அதிகாரம் உள்ளதா என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், ஈழமக்கள்புரட்சிகர விடுதலை முன்னணியின் சிரேஸ்ர உறுப்பினருமான இரா.துரைரெத்தினம் கேள்வியெழுப்பியுள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு இன்று(09) கருத்துதெரிவிக்கையிலேயே...

அதிகாரப்பகிர்விற்கான  புதிய அரசியல் யாப்பு  எந்தளவிற்கு சாத்தியம்  என்பதை  எவராலும்  கூற முடியாதுள்ளது –

இன்று இந்த அரசு முகங்கொடுத்துள்ள தொடர் பிரச்சினைகள் குறித்து நாம் நன்றாக அறிவோம். பொருளாதாரப்பிரச்சினை என்பது இன்னும் எத்தனைக் காலத்திற்கு நெருக்கடி நிலையில் தொடருமோ தெரியாது. எந்தத் துறையில்பிரச்சினை இல்லை எனக் கூற இயலாத வகையில், எல்லாத்துறைகளும் சார்ந்து பிரச்சினைகளுக்கு மேல்பிரச்சினைகளாகவே தொடரும் நிலையில் இந்த நாடு இருந்து வருகின்றது. இந்த நிலையில் அதிகாரப் பகிர்விற்கானபுதிய அரசியல் யாப்பு எந்தளவிற்கு சாத்தியம் என்பதை எவராலும் கூற முடியாதுள்ளது. என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிதுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றையதினம் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் கொள்கை விளக்க உரை பற்றிய சபைஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் - வெறுமனே அரசிலுக்காக இந்த வருட தைப் பொங்கலைக் கொண்டாடிக் கொண்டு, அடுத்த தைப் பொங்களில், இந்தவருட சித்திரைப் புத்தாண்டைக் கொண்டாடிக் கொண்டு, அடுத்த சித்திரைப் புத்தாண்டில், இந்த வருட தீபாவளியைக்கொண்டாடிக் கொண்டு, அடுத்த வருட தீபாவளியில் எமது மக்களுக்கான அரசியல் தீர்வு கிடைக்கும் என்றோ, இந்தவருடத்திற்குள் அரசியல் தீர்வு கிடைக்காவிட்டால், பயங்கர விளைவு ஏற்படும் என்றோ, சர்வதேசம் பார்த்துக்கொள்ளும் என்றோ எமது மக்களை ஏமாற்றிக் கொண்டு காலங்கடத்த முடியாது. அதிகாரப் பகிவு தொடர்பில் புதியதொரு அரசியல் யாப்பினை வகுத்துக் கொண்டு, மக்கள் அபிப்பிராயவாக்கெடுப்புக்குப் போனால், விளைவு என்னவாகும் என்பது குறித்து யதார்தபூர்வமாக சிந்திக்கின்றவர்கள்நன்கறிவார்கள். அதிகாரப் பகிர்வு குறித்த நல்லெண்ண கருத்துக்களை இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களிடம் சுமுகமாகக்கொண்டு செல்வதில் எந்தத் தரப்பினரும் இதுவரையில் வலுவான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்றே தெரியவருகின்றது. எனவே, தென் பகுதி மக்களில் பெரும்பாலானவர்களை கடந்த கால கசப்புணர்வுகளிலிருந்தும்,சந்தேகங்களிலிருந்தும் மீட்க முடியாதுள்ள நிலையே தொடர்கின்றது. இந்த நிலைப்பாட்டினை மேலும் உரம் போட்டுவளர்க்கின்ற கைங்கரியங்களை பேரினவாத இனவாத சக்திகள் மிகவும் திட்டமிட்ட வகையில் மேற்கொண்டுவருகின்றன. இதற்கு தேவையான சூழலை தமிழ்த் தரப்பு சுயலாப அரசியல்வாதிகள் சிலரும் வலிந்த உருவாக்கிவருகின்றனர் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.