பிரதானசெய்திகள்

பிரியங்க பெர்னான்டோவை, இரண்டுவார காலத்துக்குள் திருப்பி அழைக்குமாறு பிரித்தானிய அரசாங்கம் சிறிலங்காவிடம் வலியுறுத்து

லண்டனில் போராட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த, சிறிலங்கா இராணுவ அதிகாரி பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ உடனடியாக, பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகர்...

தேர்தல் காரணமாக பாடசாலைகளுக்கு விடுமுறை

  உள்ளூர் அதிகாரசபை தேர்தல் காரணமாக அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 9 ஆம் திகதி மூடப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதனுடன் வாக்கு சீட்டுகளுக்கான பெட்டிகள் மற்றும் ஆவணங்களை விநியோகித்தல் மற்றும் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படவுள்ள...

முனைக்காட்டில் ஒன்றிணைந்த இளைஞர்கள் : சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகை – பெருமளவிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டன

(படுவான் பாலகன்) முனைக்காடு கிராமத்தில் உள்ள இளைஞர்கள் ஒன்றிணைந்து, கிராமத்தில் சட்டவிரோதமான முறையில் உற்பத்தி செய்யப்படும் கசிப்பு உற்பத்தி இடங்களை முற்றுகை செய்து, கசிப்பு உற்பத்திக்காக பயன்படுத்தப்பட்ட பல பொருட்களையும் இன்று(06) செவ்வாய்க்கிழமை...

படையினரின் கட்டுப்பாட்டில் நீண்ட காலமாக இருந்த பொன்னாலை – பருத்தித்துறை வீதி மக்களின் பாவனைக்கு

படையினரின் கட்டுப்பாட்டில் நீண்ட காலமாக இருந்த பொன்னாலை – பருத்தித்துறை வீதி விடுவிக்கப்பட்டு போக்குவரத்து சேவைகளும் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 1990 ஆம் ஆண்டு முதல் மேற்படி வீதி உள்ளிட்ட பல...

ஏப்ரல் மாதம் முதல் பாடசாலைகளுக்கு இலவச Wi-fi வசதிகள்

எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் பாடசாலைகளுக்கு இலவச Wi-fi வசதிகள் வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நீர்கொழும்பு பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் இவ்வாறு...

பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை வெளியேற்ற கோரும் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்

லண்டனில் போராட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களைப் பார்த்து. கழுத்தை அறுத்து விடுவேன் என சைகை மூலம் எச்சரித்த சிறிலங்கா இராணுவ பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை, பிரித்தானியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று கோரிக்கை...

200 விகாரைகள் அமைக்க கணேசமூர்த்திக்கு நிதி ஒதுக்கீடு –கருணா தகவல்.

வடக்குக் கிழக்கைப் பிரிக்கவும் மாட்டேன் தீர்வும் தரமாட்டடேன் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.  மற்றும் வடக்குக் கிழக்கில் 1000 விகாரைகளை அமைக்கவும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளேன் எனவும் ரணில் விக்கிரமசிங்க அம்பாறையில் நடைபெற்க...

வடமாகாண ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்

வடமாகாணத்தில் தொண்டர் ஆசிரியர்களாகவும், ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்களாகவும் பணியாற்றுவோருக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளது. இது தொடர்பான வைபவம் எதிர்வரும் 15 ஆம் திகதி அலரிமாளிகையில் நடைபெறவுள்ளது.   2009ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு முன்னர் சுமார் பத்தாண்டு காலம்...

முனைக்காட்டில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளராகிய முன்னாள் போராளியின் பதாதை எரிப்பு

தமிழ்தேசிய கூட்டமைப்பின் சார்பில் மண்முனை தென்மேற்கு பிரதேச சபைக்காக முனைக்காடு 7ம் வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளர் சின்னதம்பி லோகிதராசாவின் அலுவலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பதாதைகள் இனந்தெரியாதோரல் எரிக்கப்பட்டுள்ளது. அலுவலகத்தின் முன்பாக காட்சிப்படுத்தப்பட்டிருந்த, பதாதையே இன்று(05) அதிகாலை...

இரா சம்பந்தன் தனது 85வயதைகடந்து காலடிபதித்துள்ளார்62 வருடகால தமிழ் அரசியல் அனுபவம் கொண்ட மூத்த அரசியல் தலைவர்

எதிர் கட்சித்தலைவர் இரா சம்பந்தன் தனது 85வயதைகடந்து காலடிபதித்துள்ளார்.85வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று திங்கள் கிழமை தலைவர்கள்,அரசியல் சகாக்கள் பொதுமக்கள் இளைஞர்கள் தமது வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஆன்மீகத்தில் நம்பிக்கைகொண்ட தலைவர் சம்பந்தன் இன்றைய தினம்...

ஒரே தேச உணர்வுடன் ஒரே கொடியின் கீழ் தடைகளை உடைத்தெறிந்து தாய்நாட்டின் வளர்ச்சிக்காக பங்களிக்கத் தயாராகுவோம் – மட்டு....

  எமது தேசபிதாக்களின் தியாகத்துக்கும், தொடர்ந்து வந்த முன்னோடிகளின் முயற்சிகளுக்கும் நாட்டுக்குக்கிடைத்த சுதந்திரத்துக்கும் நாம் பெருமை சேர்க்கும் வகையில் நாம் அனைவரும் ஒரே தேசம் என்ற எண்ணக்கருவுடன் ஒரே கொடியின் கீழ் எம்மைச் சூழ்ந்துள்ள...

மஹிந்த ராஜபக்ஷ குழுவுக்கு இவ்வருடம் ஒரேயொரு முகவரியே இருக்கும்அந்த முகவரி சிறைச்சாலைதான்

ஊழலில் ஈடுபட்ட மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியாளர்களை சிறையில் போடும் ஆண்டாக இவ்வாண்டு காணப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். மஹிந்த ராஜபக்ஷ குழுவுக்கு இவ்வருடம் ஒரேயொரு முகவரியே இருக்கும். அவர்களுடன் தொடர்பு...