பிரதானசெய்திகள்

மட்டு போதனா வைத்தியசாலை  நிருவாகத்துக்கு எதிராக போராட்டம்.

(கனகராசா சரவணன்) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை புற்று நோய் பிரிவில் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு சென்ற நோயாளர்கள் கதிர்;வீச்சு இயந்திரம் பழுதடைந்ததனால் சிகிச்சை பெறமுடியாததையடுத்து வைத்தியசாலையின் அசமந்த போக்கே காரணம் என குற்றச்சாட்டு தெரிவித்து ...

வெடுக்குநாறியில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய கோரி மூதூரில் கவனயீர்ப்பு.

(ஹஸ்பர் ஏ.எச்)  வவுனியா வடக்கு வெடுக்குநாறி மலையில் இடம் பெற்ற மத அனுஷ்டானங்களின் போதான சம்பவம் கண்டிக்கத்தக்கது இதற்காக நீதி தேவை எனவும் கைது செய்யப்பட்ட எண்மரை விடுதலை செய்யக் கோரி வழியுறுத்தியுமான...

பனங்காட்டுக்குள் தீ திடீரென பரவியதால் வீடு ஒன்று முற்றாக எரிந்து சாம்பலாகியது.

( வாஸ் கூஞ்ஞ) மன்னார் பொலிஸ் நிலையப் பகுதியில் காடு திடீரென தீப்பற்றி எரிந்தமையால் பரந்தளவு பனங்காடு சேதமடைந்ததுடன் ஒரு வீடும் முற்றாக தீயிற்கு இரையாகியுள்ளது. இச் சம்பவம் மன்னார் நகர் பிரதேச செயலகத்துக்கு...

பொது மக்கள் எங்கும் தீ வைக்க முனைந்தால் சுற்று சூழலையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

(வாஸ் கூஞ்ஞ) மன்னாரில் தற்பொழுது மிகவும் கடுமையான வெப்ப சூழ்நிலை காணப்படுவதால் பொதுமக்கள் தங்கள் வீட்டுக்கு அருகாமையிலோ அல்லது வேறு எங்காவது சுத்தப்படுத்தி தீ மூட்டுவதில் மிகவும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என...

அரச ஊழியர்களின் விழா முற்பணம் 20 ஆயிரம் .

(அபு அலா )  அரச ஊழியர்களுக்கு கடந்த பல வருடங்களாக வழங்கப்படுகின்ற 10 ஆயிரம் ரூபாய் விழா முற்பணத்தின் தொகையை 20 ஆயிரம் ரூபாயாக உயர்வாக வழங்கக்கோரி அரச ஊழியர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை...

அடிமைப்பட்ட அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்போம்.

அரசியல்வாதிகளின் ஏமாற்று கதைகளுக்கும், விசித்திரக் கதைகளுக்கும் அடிமைப்பட்டு, அரசியல் அதிகாரங்களின் கைக்கூலிகளாக மாறும் காலம் ஒழிக்கப்பட வேண்டும். அரசியல், மத, சமூக, கலாச்சார, பொருளாதார, கல்வி மற்றும் சுகாதார உரிமைகளுக்கான சரியான சூழலை...

திருக்கோவிலில் ஆளுநர் 100 பொதுமக்களுக்கு காணி ஆவணங்களை வழங்கினார்.

( வி.ரி. சகாதேவராஜா)  திருக்கோவில் பிரதேச பொதுமக்களுக்கு காணி ஆவணங்கள் வழங்கும் நிகழ்வு. கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் முன்னிலையில் நடைபெற்றது. இந் நிகழ்வு  திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் தலைமையில் திருக்கோவில் பிரதேச...

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய 2024 ஆண்டின் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு.

(பாறுக் ஷிஹான்)  கல்முனை தலைமையக பொலிஸ் நிலையம் வருடாந்தம் நடாத்தும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு  திங்கட்கிழமை(18)    மாலை பொலிஸ் நிலைய திறந்த வெளியரங்கில் கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி...

கல்முனை சந்தான ஈஸ்வரர் ஆலய பிரம்மோற்சவ தேர்த் திருவிழா.

( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்திப் பெற்ற கல்முனை நகர் அருள் வளர் கௌரி அம்பிகை உடனுறை சந்தான ஈஸ்வரர் தேவஸ்தானத்தின் பிரமோற்சவ திருவிழா கடந்த 14 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. தொடர்ந்து பத்து...

இனரீதியாக ஆளுநர் மீது வீண்பழி.(பா.உ ஜனா)

கிழக்கு மாகாணத்தின் அனைத்து உயர்மட்ட விடயங்களையும் கையாளும் அதிகாரிகளாக முஸ்லீம் அதிகாரிகள் இருக்கும் போது ஒருசில முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இனரீதியாக ஆளுநர் மீது வீண்பழி சுமத்துவது கண்டிக்கத் தக்கது என தமிழ்த்...

சிறைச்சாலைகளிலும் பொலிஸாரால் நீதிக்கு புறம்பான கொலைகள் ஜெனீவாவிற்கு அறிக்கை.

கைதிகளின் உரிமைகளுக்காக வாதிடும் இலங்கையின் முன்னணி அமைப்பு ஒன்று, இலங்கை பொலிஸ் மற்றும் சிறைச்சாலைகளால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சட்டவிரோத கொலைகள் மற்றும் சித்திரவதைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபைக்கு விசேட அறிக்கையொன்றை வழங்கியுள்ளது. ஜெனிவாவில்...

கிழக்கு மாகாண ஆளுநர் சுயத்தொழில் திட்டங்கள் தொடங்கி வைத்தார்.

போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்பட்டு புனர்வாழ்வு பெற்ற இளைஞர்களுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சுயத்தொழில் திட்டங்கள் தொடங்கி வைத்தார்! அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்பட்டு புனர்வாழ்வு பெற்ற இளைஞர்களின் புதிய வாழ்வின்...

சவளக்கடை 5 ஆம் கொலனியில் 20 பவுண் நகைகளை களவாடிய நபர்கள் கைது.

(பாறுக் ஷிஹான்,எருவில் துசி) பல இலட்சம் பெறுமதியான 20 பவுண் நகைகளை திட்டமிட்டு களவாடிய 3   சந்தேக நபர்களை சவளக்கடை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 5 ஆம்...

ஒரு வார காலமாக மூடிக் கிடக்கும் திருக்கோவில் ஆதார வைத்தியசாலை.

( வி.ரி. சகாதேவராஜா)   கடந்த ஒரு வார காலமாக திருக்கோவில் ஆதார வைத்தியசாலை வைத்தியர்களின் பணிப்பகிஸ்ப்பினால் மூடி கிடக்கின்றது.  இதனால் அந்த பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 32 ஆயிரம் தமிழ்மக்கள் வைத்திய சேவையின்றி பாதிக்கப்பட்டுள்ளார்கள்...

தமிழ் தேசத்தை தமிழ்ழீழம் என அழையுங்கள்- த.வி.கூ. கட்சியின் தலைவர் அருண் தம்பிமுத்து  வேண்டுகோள்.

(கனகராசா சரவணன்) சிங்கள தேசியம் தமிழர்களை சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் ஒரு குறுந்தேசிய இனமாக மாற்றும் திட்டம் அதனடிப்படையில் தமிழர்களின் பிரச்சனையை ஒரு கால் பந்தாட்டம் போல அங்கும் இங்கும் உதைத்து வருகின்றனர்...

பா.உ ஜனாவின் முயற்சியால் திருக்கோவில் வலயக் கல்வி அலுவல கட்டிட பற்றாக்குறை தீர்த்துவைப்பு.

(சுமன்) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா அவர்களின் முயற்சியின் பயனாக திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகத்தின் செயற்பாடுகளுக்காக...

சம்பிரதாய போக்குகளால் உலகை வெற்றி கொள்ள முடியாது.

 எல்லையற்ற அதிகார பேராசை கொண்ட பல்வேறு தரப்பினர் பெரும் செல்வத்தை செலவழித்து அதிகாரத்தை பெற முயற்சிக்கும் நேரத்தில் இலங்கையின் 76 வருட ஜனநாயக வரலாற்றில் அதிகாரம் இன்றி நாட்டிற்கு சேவையாற்றிய ஒரேயொரு எதிர்க்கட்சி...

வாழ்வு சுமந்த வலி நூல் வெளியீட்டு விழா.

(அபு அலா)  அன்பின் பாதை எண்ணம் போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கரவை. மு.தயாளனின் "வாழ்வு சுமந்த வலி" நூல் வெளியீட்டு விழா (17) திருகோணமலை நகராட்சி மன்ற...

திருகோணமலையில் மகளிர் தின சிறப்பு கலை, இலக்கிய நிகழ்வு.

(ஹஸ்பர் ஏ.எச் )  திருகோணமலை நகராட்சி மன்ற பொது நூலகம் மற்றும்  பொது நூலகத்தின் வாசகர் வட்டம் இனைந்த  ஏற்பாட்டில் மாதாந்த கலை, இலக்கிய நிகழ்வின் வரிசையில் மகளிர் தின சிறப்பு கலை,...

அம்பாறை மாவட்டத்தில்  வெள்ளரிப்பழ   விற்பனை  அமோகம்.

(பாறுக் ஷிஹான்)  அம்பாறை மாவட்டத்தில் தற்போது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக கரையோர பகுதி பிரதான வீதியோரங்களில் வெள்ளரிப்பழம் விற்பனை செய்யப்படுவதுடன் மக்களும் ஆர்வத்துடன் கொள்வனவு செய்து வருகின்றனர். மேலும் இம்மாவட்டத்தின் பெரிய நீலாவணை...