ஊர்ச் செய்திகள்

திறைசேரி முகாமைத்துவசேவைகள் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் கலாநிதி கோபாலரெத்தினம் இந்தோனேசியா பயணம்!

(காரைதீவு சகா) இலங்கை திறைசேரியின் முகாமைத்துவசேவைகள் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் கலாநிதி மூத்ததம்பி கோபாலரெத்தினம் இன்று (21) சனிக்கிழமை இந்தோனேசியா பயணமாகின்றார். இலங்கை நிருவாகசேவையின் அதிவிசேட சிறப்புத்தரத்தை ச்சேர்ந்த முதலாந்தர உயரதிகாரியான கலாநிதி கோபாலரெத்தினம்...

மாவடிமுன்மாரியில் பாரம்பரிய விளையாட்டு

(படுவான் பாலகன்) மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட மாவடிமுன்மாரி செந்தழல் விளையாட்டுக்கழகத்தின் சித்திரைப்புத்தாண்டு பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகள் மாவடிமுன்மாரியில் இடம்பெற்றன. இதன்போது, மாவூதி காசெடுத்தல், வழுக்குமரம் ஏறுதல், கண்கட்டி முட்டி உடைத்தல், முட்டை மாற்றுதல்,...

கவிஞர் ‘சண்முகம் சிவலிங்கம் ’ தமிழ் இலக்கிய உலகில் தன் தனித்துவ அடையாளத்தை பதிவு செய்த ஒரு படைப்பாளி...

புவிநேசராசா கேதீஸ்- உலகறிந்த கவிஞர் ‘சண்முகம் சிவலிங்கம்’ அவர்கள் இம் மண்ணை விட்டு பிரிந்து   சித்திரை இருபது இன்றுடன் (20.04.2018)  ஆண்டுகள்  ஆறு. காலம் நகர்ந்தாலும் அவரின் படைப்புகள் நிலைத்து நிற்கின்றன .அவற்றின் மூலம்...

திருகோணமலை பன்குளம் ஸ்ரீ எல்லைக்காளியம்பாள் ஆலயத்திற்கான அடிக்கல்நாட்டுவிழாவில்எதிர்கட்சித்தலைவர் இரா சம்பந்தன்

பொன் சற்சிவானந்தம் திருகோணமலைமாவட்டத்தின் வடக்கு எல்லைப்பகுதியான பன்குளம் பறையனாளங்குளம் பகுதியில் பூர்வீகமாக எழுந்தருளி அருள்பாலித்து வரும் பன்குளம் ஸ்ரீ எல்லைக்காளியம்பாள்ஆலயத்திற்கான அடிக்கல்நாட்டுவிழா ஆலய நிர்வாகத்தின் ஏற்பாட்டில் அக்ஷய திருத்திய தினத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் எதிர்கட்சித்தலைவர்...

கட்டாக்காலி மாடுகளை முறையாக கட்டி பராமரிக்குமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல்

(-க.விஜயரெத்தினம்) மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களில் கட்டாக்காலி மாடுகளை முறையாக கட்டி பராமரிக்குமாறு ஒலிபெருக்கி மூலம் இன்று(18.4.2018)  குருக்கள்மடம் கிராமம் முதல் துறைநீலாவணை வரையும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.இதனை மண்முனை தென்...

வாழைச்சேனை கிண்ணையடி மில்லர் விளையாட்டுக் கழகத்தின் சித்திரை புத்தாண்டு விளையாட்டு விழா

வாழைச்சேனை கிண்ணையடி மில்லர் விளையாட்டுக் கழகத்தின் சித்திரை புத்தாண்டு விளையாட்டு விழா கழக மைதானத்தில் திங்கட்கிழமை மாலை நடைபெற்றது. மில்லர் விளையாட்டுக் கழக தலைவர் எஸ்.குகதீசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின்...

கல்முனை ஸாஹிராவில்“ஐக்கியமே பாக்கியம்” பாரிய நடைபவனி.

எஸ்.அஷ்ரப்கான், எம்.வை.அமீர் கல்முனை ஸாஹிராவில் கல்விகற்ற கற்றுக்கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்களின் பங்குபற்றுதலுடன் “ஐக்கியமே பாக்கியம்” எனும் தொனிப்பொருளில் 2018-04-14 ஆம் திகதி, ஸாஹிரா முற்றலில் இருந்து பாரிய நடைபவனி ஒன்று அதிபர் எம்.எஸ். முகம்மட் தலைமையில்...

கொக்கட்டிச்சோலையில் சௌபாக்கியா சித்திரைப்புத்தாண்டு விற்பனைச் சந்தை

(படுவான் பாலகன்) “சௌபாக்கியா” சித்திரைப்புத்தாண்டு விற்பனைச் சந்தை கொக்கட்டிச்சோலை மகா சங்க கட்டிட வளாகத்தில் இன்று(12) திறந்து வைக்கப்பட்டது. சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களமும், பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் குறித்த சந்தையில் உள்ளுர் உற்பத்திகள்...

கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் சித்திரைப்புத்தாண்டு பூசை

வரலாற்று சிறப்புமிகு கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் சித்திரைப்புத்தாண்டு பூசை நிகழ்வுகள் எதிர்வரும் சனிக்கிழமை(14) காலை 07.00மணிக்கு நடைபெறவுள்ளதாக ஆலய பரிபாலனசபையின் வண்ணக்கர் செயலாளர் இ.சாந்தலிங்கம் தெரிவித்தார். புதிய விளம்பி வருடம் 2018.04.14ம் திகதி...

நாசீவந்தீவு மக்களுக்கு புதுவருட ஆடை வழங்கல்

வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபையின் உறுப்பினர் க.கமலநேசன் வறுமையை ஒழிப்போம் என்னும் தொனிப் பொருளில் பல்வேறு வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றார். அந்தவகையில் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு பின்தங்கிய கஷ்டப் பிரதேசத்தில் வாழும் முதியோர்கள்...

போரதீவுப்பற்று தரம் 05 மாணவர்களின் அடைவு மட்டத்தை அதிகரிப்பதற்கான செயற்றிட்ட ஆரம்ப நிகழ்வு

(பழுகாமம் நிருபர்) மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட போரதீவுப்பற்று கல்விக்கோட்டத்தில் இன்று(07.04) இரு பாடசாலைகளில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.  திருப்பழுகாமம் விபுலானந்த வித்தியாலயம் மற்றும் மண்டூர் 14 அ.த.க.பாடசாலையிலும் கோட்டக்கல்விப்பணிப்பாளர் என்.அருள்ராஜாவின் தலைமையில் இடம்பெற்றது. போரதீவு...

கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை பழைய மாணவர்களின் ஒன்று கூடலும் சிறப்பு நிகழ்வுகளும்!

கல்முனை கார்மேல் பற்றிமா   தேசிய கல்லூரியின் பழைய மாணவர் சங்க வருடாந்த ஒன்று கூடல் 'ஒருமித்து கல்வி கூடத்தில் ஒன்று படுவோம்' எனும் தொனிப்பொருளில் கல்முனை கார்மேல் பற்றிமா   தேசிய பாடசாலையில் கல்வி...