ஊர்ச் செய்திகள்

உவர்மலை விவேகானந்தா கல்லூரியின் முன்னாள் அதிபர் .நவரத்தினம் அவர்களின் 70வது அகவை தினத்தில் 2000 மரம் நாட்டி அழகு...

பொன்ஆனந்தம் திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியின் முன்னாள் அதிபர் .நவரத்தினம் அவர்களின் 70வது அகவை தினத்தில்(01.07.2018), அவரது மாணவர்களினால் சிறப்பாக திருகோணமலையில் முன்னெடுக்கப்பட்டு வரும் Green world for future அமைப்பினால் பிறந்த தின ஞாபகார்த்தமாக...

உவர்மலைவிவேகானந்தாக்கல்லூரியின் 40வது ஆண்டைமுன்னிட்ட மாபெரும் சைக்கிள்ஓட்டப்போட்டி

பொன்ஆனந்தம் திருகோணமலை உவர்மலைவிவேகானந்தாக்கல்லூரியின் 40வது ஆண்டைமுன்னிட்ட மாபெரும் சைக்கிள்ஓட்டப்போட்டி இன்று காலை இடம்பெற்றது. இதன் முடிவில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பு கல்லூரி மண்டபத்தில் கல்லூரி அதிபர் ந.ரவிதாஸ் தலமையில் இடம்பெற்றது. இங்கு முதலிடத்தைபெற்ற மாணவனுக்கு கிழக்குமாகாண...

முனைத்தீவு சக்திவித்தியாலயத்திற்கு புதிய அதிபர்

பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலய அதிபர் சு.உதயகுமார் அவர்கள் முனைத்திவு சக்தி மகா விததியாலயத்திற்கு புதிய அதிபராக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால் நியமிக்கப்பட்டுள்ளார். பலகாலமாக முனைத்தீவு சக்தி மகா வித்தியாலயத்திற்கான அதிபர்...

திருமலையில் வீரமாநகர், பாட்டாளிபுரம்,  இளக்கந்தை கிராம மக்களுக்கு குடி நீர் இணைப்புக்கான பொருட்கள்.

திருகோணமலை மாவட்டத்திலுள்ள மூதூர் பிரதேச செயலகப்பிரிவுக்கு உட்பட்ட வீரமாநகர்  பாட்டாளிபுரம் மற்றும் இளக்கந்தை ஆகிய கிராமங்களில் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கான குடி நீர் இணைப்பினை வழங்குவதற்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டது  இநிகழ்வு    வீரமாநகர் சனசமூக நிலைய கட்டிடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது கிராமிய கல்வி நிறுவனத்தின் இணைப்பாளர்,  ஓய்வுநிலை கிராமசேவகர் எஸ்.சந்திரகுமார்   ஓய்வுநிலை கோட்டக்கல்வி அதிகாரி அ.தயானந்த குரு மற்றும்கிராமங்களின் தலைவர்களின் பங்களிப்புடன்  நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு பணம் செலுத்தப்பட்ட 60 பயனாளிகளுக்கான இணைப்புக்கான பொருட்கள் வழங்கப்பட்டது  புதிய பயனாளிகள் 100 பேரை தெரிவு செய்யும் நிகழ்வும் இடம்பெற்றது இப்பிரதேசத்தில் 570 ற்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வதுடன் கூடுதலானோர் வறுமைக்கு உட்பட்டும் சிறுநீரக நோய்த்தாக்கத்திற்கும் உட்பட்டும் உள்ளனர் கிராமமட்டத் தலைவர்களின் கருத்துப்படி பலர் நீர் இணைப்புகளை பெற்றுத்தருவதாக கூறினாலும் அதன் பெறுபேறுகள் குறைவாக உள்ளதாக கூறுகின்றனர் .  கிராமிய கல்வி அபிவிருத்தி நிறுவனத்தின் மூலம் ஒருமாதமாக காலம்பகுதிக்குள்   இவ் வேலைத்திட்டத்தினை மிக விரைவாக செயற்படுத்த உதவிய கிராமியகல்வி அபிவிருத்தி நிறுவன சமூகத்தினருக்கும் நிர்வாகத்தினருக்கும் பயனாளிகளினை உரிய முறையில் தெரிவு செய்ய ஒத்துளைத்த கிராம மட்டசங்கத்தினருக்கும் விரைவான  செயற்பாட்டிற்காக உதவிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொறியியலாளர்  மற்றும் சபையினருக்கும்  மக்கள்  நன்றிகூறினர் .

இன்று சுவாமி கெங்காதரானந்தாஜி அவர்களின் ஜனனதின நிகழ்வு

பொன்ஆனந்தம் சுவாமி கெங்காதரானந்தாஜி அவர்களின் ஜனனதின நிகழ்வு அவரது சமாதி அமைந்துள்ள திருகோணமலை சிவயோக சமாஜத்தில் நடைபெறவுள்ளது. நாளைய தினம் (22.06.2018) மாலை 5.30 மணிக்கு சமாஜத்தின் நிகழ்வு மண்டபத்தில் தலைவர் டாக்டர் எஸ்;பி .இராமசந்திரன்...

குருமண்வெளியில் சேவைநலன் பாராட்டுவிழா

செ.துஜியந்தன் பட்டிருப்பு கல்விவலயத்திற்குட்பட்ட குருமண்வெளி சிவசக்தி மகாவித்தியாலயத்தில் கடமையாற்றிய ஆங்கில ஆசிரியர் பொ.உமாரூபன் இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவை தரம் 3 இற்கு பதவி உயர்வு பெற்றுச் செல்கின்றார் இவரது சேவையினை பாராட்டி கௌரவிக்கும் சேவைநலன்...

பாண்டிருப்பு குருக்கள்வீதியை புனரமைக்குமாறு பிரதேசமக்கள் கோரிக்கை

செ.துஜியந்தன் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட தமிழ்க்கிராமங்களில் அமைந்துள்ள பல வீதிகள் சிதைவடைந்த நிலையில் குன்றும் குழியுமாக காட்சியளிக்கின்றன. இதன் காரணமாக வீதிகளில் பயணிப்போர் மிகுந்த சிரமங்களுக்குள்ளாகிவருகின்றனர். இந்நிலையில் பாண்டிருப்பு கிராமத்திலுள்ள குருக்கள்வீதியானது கடந்த முப்பதுவருட காலமாக...

திருகோணலை நகரில்இந்துசமய அறநெறி விழிப்புணர்வு ஊர்வலம்

திருகோணலை நகரில் இன்று காலை இந்துசமய அறநெறி விழிப்புணர்வு ஊர்வலம்மிகவும்  சிறப்பாநடைபெற்றது  இதன்போது மாவட்டத்தின்  பாகங்களில் இருந்தும் பலரும் கலந்து கொண்டனர் .

காரைதீவு பிரதேசசபையில் இந்துகொடிதினம்!

சகா   இந்து சமய அறநெறிக் கல்வியின் முக்கியத்துவத்தினை உணர்த்தும் முகமாக நாடு பூராகவும் அனுஷ்டிக்கப்படும் கொடி தினம்  காரைதீவு பிரதேச சபையில் தவிசாளர் கீ.ஜெயசிறில் அவர்களினால் நந்திக் கொடி ஏற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டது.   இதில் இந்து...

திருகோணமலைகன்னியா இராவணேஸ்வரன் தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டி.

திருகோணமலைகன்னியா இராவணேஸ்வரன் தமிழ் வித்தியாலய மாணவர்களான செல்வி விஜயநாதன் வர்சா, செல்வி ஜஸ்டின் தீபிகா ஆகியோர் க.பொ.த.சா.தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றமைக்காக கௌரவ பிரதேச சபை உறுப்பினர் திருமதி. பி.இராஜலட்சுமி அவர்களால்...

தம்பலகாமம் ஆதிகோணேஸ்வரா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா

பொன்ஆனந்தம் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள தம்பலகமம் ஆதிகோணேஸ்வரா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா வித்தியாலய அதிபர் க.யோகானந்தம் தலமையில் திங்களன்று இடம்பெற்றன. இந்நிகழ்வின் இறுதி மேடை நிகழ்வில் வருகைதந்தகிழக்குமாகாண கல்விச்செயலாளர முத்துபண்டா ;,உதவி மாவட்டச்செயலாளர் ந.பிரதீபன்,பிரதேச செயலாளர்...

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு இலட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டம் முன்னெடுப்பு

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு எலையன்ஸ் பினான்ஸ் நிறுவனத்தின் உதவியுடன் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்தில் அதிபர் சு.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.  இந் நிகழ்வில் நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர் டனியல் பாக்கியம்...