ஊர்ச் செய்திகள்

மட்டு மாவட்டத்தில் டெங்கினால் 12வயது சிறுமி உயிரிழப்பு

டெங்குக் காய்ச்சல் காரணமாக காத்தான்குடியைச் சேர்ந்த பாத்திமா சஹா (வயது 12) என்ற சிறுமி, புதன்கிழமை மாலை உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின்  பணிப்பாளர், டொக்டர் எம்.எஜ்.இப்றnலெப்பை தெரிவித்தார். டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இச்சிறுமி,...

வெல்லாவெளி விளையாட்டு மைதானங்கள் ஜனாவின் நிதிப்பங்களிப்புடன் மீள்புனரமைப்பு.

(க.விஜயரெத்தினம்) மட்டக்களப்பு மாவட்டத்தின்  வெல்லாவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பல கிராமங்களில் உள்ள தூர்ந்து போன நிலையில் காணப்படும் விளையாட்டு மைதானங்களை  கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்(ஜனா) அவர்கள் பார்வையிட்டு தனது நிதியைப்...

கொல்லநுலை தேவிலாமுனையில் மகாபாரதம் 17ம், 18ம் போர் அரங்கேற்றம்

(படுவான் பாலகன்)  மட்டக்களப்பு, தேவிலாமுனை கிராமத்தில் மாகாபாரத்தின் 17ம், 18ம் போர் வடமோடி கூத்து அரங்கேற்ற விழா செவ்வாய்க்கிழமை(09) இரவு தேவிலாமுனையில் நடைபெற்றது.. கடந்த ஐந்து வருடங்களாக ஒவ்வொரு வருடமும் கூத்தொன்றினை ஆடி குறித்த...

பட்டிப்பளை கல்வி வலயத்திற்கு சொந்தமான கட்டிடத்தினை பொலிஸார் விடுவிக்க வேண்டும்.

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு, மண்முனை தென்மேற்கு கல்வி கோட்டத்திற்குட்பட்ட பட்டிப்பளை கிராமத்தில் அமைந்துள்ள ஆசிரியர் மத்திய நிலையத்திலிருந்து பொலிஸாரை வெளியேற்ற வேண்டுமென மகிழடித்தீவில் திங்கட்கிழமை நடைபெற்ற மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய விளையாட்டு...

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய விளையாட்டுப் போட்டி

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய, வலயமட்ட விளையாட்டுப் போட்டி திங்கட்கிழமை மகிழடித்தீவு பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. வலயத்திற்குட்பட்ட 67பாடசாலைகளின் கொடிகளுடன், தேசிய, மாகாண, வலய, கோட்ட கொடிகளும் ஏற்றப்பட்டன. விளையாட்டு...

மகிழடித்தீவில் அல்லி நாடகம் அரங்கேற்றம்

(படுவான் பாலகன்) மகிழடித்தீவு கிராம மக்களினால் புதிதாக பழக்கப்பட்ட அல்லி தென்மோடிக் கூத்து அரங்கேற்ற நிகழ்வு திங்கட்கிழமை இரவு மகிழடித்தீவு கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் நடைபெற்றது. ஒரு வருட காலமாக பழக்கப்பட்ட குறித்த...

உதைபந்தாட்ட போட்டியில் முனைக்காடு இராமகிருஸ்ண விளையாட்டுக்கழகம் முதலிடம்

(படுவான் பாலகன்) உதைபந்தாட்டம் சூடுபிடித்துள்ள இக்கால சூழ்நிலையில் படுவான்கரை பிரதேச கிராமங்களில் அனைத்துக் கழக வீரர்களும் சிறந்த பயிற்சிகளில்; ஈடுபட்டு வருகின்ற அதேவேளை தமது கிராமத்து உறவுகள் மற்றும்கழக நினைவு தினம் என்பவற்றை...

கவிஞர் சண்முகம் சிவலிங்கம் அவர்களின் ஐந்தாம் ஆண்டு ‘நினைவின் நிழலில்’ நிகழ்வு

உலகறிந்த கவிஞர் ''சண்முகம் சிவலிங்கம்'' அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவாக  ''நினைவின் நிழலில்'' நிகழ்வு கல்முனை நெற் ஊடக வலையமைப்பின் ஏற்பாட்டில் 07.04.2017  நடைபெற்றது. எழுத்தாளரும் கல்முனை நெற் ஊடக வலையமைப்பின் ஆலோசகருமான உமாவரதராஜன்...

61வருடங்களின் பின் விழாக்கோலம் பூண்ட கொக்கட்டிச்சோலை

(படுவான் பாலகன்) கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் அரிச்சந்திர புராணம் வடமோடிக் கூத்து சனிக்கிழமை(06) இரவு கொக்கட்டிச்சோலை குமரகுரு விளையாட்டு மைதானத்தில் அரங்கேற்றம் செய்யப்பட்டது.. கொக்கட்டிச்சோலை கிராமத்தில் 1956ம் ஆண்டு அரிசந்திர புராணம் வடமோடிக்கூத்து...

கல்லாறு பகுதியில் கசிப்பு உற்பத்தி இடம் சுற்றி வலைப்பு

கிளிநொச்சி தரும புரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லாறு பகுதியில் (05.05.2017) சட்ட விரோதமான முறையில். கசிப்பு உற்பத்தி மேற்கொள்ளப்பட்ட இடம் ஒன்றில் தரும புரம் பொலிசார் மேற்கொண்ட  விசேட சுற்றிவளைப்பின் போது ஒருவர்...

இளைஞர் சேவை அதிகாரி க.சசீந்திரன்(சசி) இந்தியா பயணம்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட மண்முனை மேற்குப் பிரதேச இளைஞர் சேவை அதிகாரி கணேசமூர்த்தி சசீந்திரன்(சசி) இன்று 06ஆம் திகதி அதிகாலை இந்திய பயணமானார். தேசிய இளைஞர் சேவைகள் மண்றத்தின் இளைஞர்...

கொக்கட்டிச்சோலை, விடுதிக்கல் குப்பைமேடு துப்பரவு பணி மும்முரம்

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு, மண்முனை தென்மேற்கு பிரதேசசபைக்குட்பட்ட கழிவுகளை கொட்டும், விடுதிக்கல் குப்பைமேட்டுப் பகுதியில் உள்ள, குப்பைகளை அகற்றி, இடத்தினை துப்பரவு செய்யும் வேலைகளை துரிதமாக மண்முனை தென்மேற்கு பிரதேச சபையினர் செய்து...