ஊர்ச் செய்திகள்

மட்டக்களப்பு கல்விவலயம் முதலிடம்

(க. விஜயரெத்தினம்) கிழக்கு மாகாண விளையாட்டுப் போட்டியில் குழு விளையாட்டுக்களில் மட்டக்களப்பு கல்வி வலயம் முதலிடம் பெற்றுள்ளதாக மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் கே.பாஸ்கரன் தெரிவித்தார். கடந்த 5.5.2018 திகதி முதல் 8.7.2018 வரையும் நடைபெற்ற...

கிழக்கில் முதன் முறையாக மேகக் கணணி (Cloud Computing) தொடர்பான நவீன பயிற்சி முகாம்

கிழக்கில் முதன் முறையாக உலகில் தற்போது வளர்ச்சியடைந்துவரும் அதிநவீன தொழில்நுட்பமான மேகக் கனணி மற்றும் அதன் செயற்பாடுகள் (Cloud Computing -365) பயிற்சி முகாம் மட்டக்களப்பில் நடைபெற்றது. மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில்...

புதிய கொடித்தம்பத்தில் ஆடிஅமாவாசை மஹோற்சவத்திற்கான கொடியேற்றத்திருவிழா!

  2000ஆண்டுகள் பழமைவாய்ந்த வரலாற்றுப்பிரசித்திபெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடிஅமாவாசை மஹோற்சவத்திற்கான கொடியேற்றம் நேற்று(25) புதனன்று  ஆலயத்தலைவர் சு.சுரேஸ் முன்னிலையில் ஆலயபிரதமகுரு சிவஸ்ரீ.சண்முக மகேஸ்வரக்குருக்கள் தலைமையிலான 12குருக்கள் சகிதம்  புதியகொடித்தம்பத்தில் வெகுசிறப்பாக...

தமிழ்த்தினப்போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற மகிழூர் த.சுதர்ணியா

இம்முறை நடைபெற்ற தேசிய மட்ட தமிழ்த்தினப்போட்டியில் இலக்கிய விமர்சனப்போட்டியில் பங்குபற்றி முதலாமிடம் பெற்று தக்கப்பதக்கம் பெற்ற மகிழூர் சரஸ்வதி வித்தியாலய மாணவி த.சுதர்ணியாவை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு வித்தியாலயத்தில் வித்தியாலய அதிபர் ந.புட்பமூர்த்தி...

ஏறாவூர் நகர்ப் பிரதேச சமுக சேவை அலுவலக உத்தியோகத்தர்களின் பெயர், பதவி பெறிக்கப்பட்ட பெயர்ப் பலகைகள் கையளிப்பு…

  ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தின் சமூகசேவைகள் அலுவலக உத்தியோகத்தர்களினது பெயர் மற்றும் பதவிநிலை என்பன பொறிக்கப்பட்ட பெயர்ப் பலகைகள் ஏறாவூர் சமுக சேவைகள் அபிவிருத்தி ஒன்றியத்தினால் நேற்;று வழங்கி வைக்கப்பட்டது. இப்பெயர்ப் பலகைகளினை ஏறாவூர்...

கொக்குவில் ,சத்துருக்கொண்டான் கிராமத்தை மாநகர கிராமம் என்று சொல்வதற்கு கூட வெட்கமாக உள்ளது.

மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட கொக்குவில் மற்றும் சத்துருக்கொண்டான் கிராமத்தை அரச அதிகாரிகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் மாற்றான் தாய் பிள்ளைகளாகவே கடந்த காலத்தில் பார்த்தனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு...

சிவானந்தியன்களால் படுவான்கரை மாணவர்களுக்கு உதவி.

க.விஜயரெத்தினம்) மட்டக்களப்பு சிவானந்தா,விவேகானந்தா மாணவர் ஒன்றியத்தினால் பொருளாதாரக்குறைவுள்ள மட்டக்களப்பு  மேற்கு கல்வி வலய பாடசாலை மாணவர்களின் கல்வி சார் நடவடிக்கைகளுக்காக ஒரு தொகுதி பாடசாலை உபகரணங்கள் இவ் மாணவர் ஒன்றியத்தினால் வழங்கிவைக்கப்பட்டது. இது தொடர்பான விசேட...

திருகோணமலை இலிங்கநகர் கிராமத்தில் 13 வீடுகளில் டெங்கு குடம்பிகள்

பொன்ஆனந்தம் திருகோணமலை இலிங்கநகர் கிராமத்தில் நேற்று காலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 13 வீடுகளில் டெங்கு குடம்பிகள் இனம் காணப்பட்டுள்ளதாக டெங்கு ஒழிப்பிரிவிற்குப்பொறுப்பான வைத்திய அதிகாரி டாக்டர் நா.சரவணபவன் தெரிவித்தார். திருகோணமலை பட்டணமும் சூழலும் பொதுச்சகாதார பிரிவிற்குள்வரும்...

உவர்மலை விவேகானந்தா கல்லூரியின் முன்னாள் அதிபர் .நவரத்தினம் அவர்களின் 70வது அகவை தினத்தில் 2000 மரம் நாட்டி அழகு...

பொன்ஆனந்தம் திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியின் முன்னாள் அதிபர் .நவரத்தினம் அவர்களின் 70வது அகவை தினத்தில்(01.07.2018), அவரது மாணவர்களினால் சிறப்பாக திருகோணமலையில் முன்னெடுக்கப்பட்டு வரும் Green world for future அமைப்பினால் பிறந்த தின ஞாபகார்த்தமாக...

உவர்மலைவிவேகானந்தாக்கல்லூரியின் 40வது ஆண்டைமுன்னிட்ட மாபெரும் சைக்கிள்ஓட்டப்போட்டி

பொன்ஆனந்தம் திருகோணமலை உவர்மலைவிவேகானந்தாக்கல்லூரியின் 40வது ஆண்டைமுன்னிட்ட மாபெரும் சைக்கிள்ஓட்டப்போட்டி இன்று காலை இடம்பெற்றது. இதன் முடிவில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பு கல்லூரி மண்டபத்தில் கல்லூரி அதிபர் ந.ரவிதாஸ் தலமையில் இடம்பெற்றது. இங்கு முதலிடத்தைபெற்ற மாணவனுக்கு கிழக்குமாகாண...

முனைத்தீவு சக்திவித்தியாலயத்திற்கு புதிய அதிபர்

பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலய அதிபர் சு.உதயகுமார் அவர்கள் முனைத்திவு சக்தி மகா விததியாலயத்திற்கு புதிய அதிபராக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால் நியமிக்கப்பட்டுள்ளார். பலகாலமாக முனைத்தீவு சக்தி மகா வித்தியாலயத்திற்கான அதிபர்...

திருமலையில் வீரமாநகர், பாட்டாளிபுரம்,  இளக்கந்தை கிராம மக்களுக்கு குடி நீர் இணைப்புக்கான பொருட்கள்.

திருகோணமலை மாவட்டத்திலுள்ள மூதூர் பிரதேச செயலகப்பிரிவுக்கு உட்பட்ட வீரமாநகர்  பாட்டாளிபுரம் மற்றும் இளக்கந்தை ஆகிய கிராமங்களில் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கான குடி நீர் இணைப்பினை வழங்குவதற்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டது  இநிகழ்வு    வீரமாநகர் சனசமூக நிலைய கட்டிடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது கிராமிய கல்வி நிறுவனத்தின் இணைப்பாளர்,  ஓய்வுநிலை கிராமசேவகர் எஸ்.சந்திரகுமார்   ஓய்வுநிலை கோட்டக்கல்வி அதிகாரி அ.தயானந்த குரு மற்றும்கிராமங்களின் தலைவர்களின் பங்களிப்புடன்  நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு பணம் செலுத்தப்பட்ட 60 பயனாளிகளுக்கான இணைப்புக்கான பொருட்கள் வழங்கப்பட்டது  புதிய பயனாளிகள் 100 பேரை தெரிவு செய்யும் நிகழ்வும் இடம்பெற்றது இப்பிரதேசத்தில் 570 ற்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வதுடன் கூடுதலானோர் வறுமைக்கு உட்பட்டும் சிறுநீரக நோய்த்தாக்கத்திற்கும் உட்பட்டும் உள்ளனர் கிராமமட்டத் தலைவர்களின் கருத்துப்படி பலர் நீர் இணைப்புகளை பெற்றுத்தருவதாக கூறினாலும் அதன் பெறுபேறுகள் குறைவாக உள்ளதாக கூறுகின்றனர் .  கிராமிய கல்வி அபிவிருத்தி நிறுவனத்தின் மூலம் ஒருமாதமாக காலம்பகுதிக்குள்   இவ் வேலைத்திட்டத்தினை மிக விரைவாக செயற்படுத்த உதவிய கிராமியகல்வி அபிவிருத்தி நிறுவன சமூகத்தினருக்கும் நிர்வாகத்தினருக்கும் பயனாளிகளினை உரிய முறையில் தெரிவு செய்ய ஒத்துளைத்த கிராம மட்டசங்கத்தினருக்கும் விரைவான  செயற்பாட்டிற்காக உதவிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொறியியலாளர்  மற்றும் சபையினருக்கும்  மக்கள்  நன்றிகூறினர் .