ஏனையசெய்திகள்

வேல்முருகு மாஸ்டரின் 32 ஆவது ஆண்டு சிரார்த்த தினம் இன்றாகும்.

(சிவம்) அம்பாரை மாவட்ட தமிழ் மக்களுக்கு அரணாகவும் எல்லைக் காவலனாகவும் இருந்து தமிழ்த் தேசியத்தை வலியுறுத்தி மக்களின் அரசியல்  உரிமைகளைப் பெறுவதற்காக உழைத்து வந்த நிலையிலே அவர் இனந்தெரியாதோரால கடத்திச் செல்லப்பட்டு  சுட்டுக் கொல்லப்பட்ட வேல்முருகு மாஸ்டரின் 32 ஆவது ஆண்டு சிரார்த்த தினம் இன்றாகும். பாரதக் கதையினால் பெயர் பெற்ற பாண்டிருப்பு திரௌபதையம்மன் ஆலயத்தின் அருகினிலே இருக்கும் தனது இல்லத்தை செல்வா இல்லம் என பெயர் வைத்து இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் பாசறையில் வளர்ந்து தமிழ் மக்களுக்காக தன்னையே அர்ப்பணித்து ஆகுதியாகினார். எஸ்.ஜே.வி. செல்வநாயகம், அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், கோப்பாய் கோமகன் வன்னியசிங்கம், ஆவரங்கால் சின்னத்துரை, வண்ணையானந்தன, தங்கத்துரை, காசியானந்தன், செ.இராஜதுரை ஆகியோருக்கு அடைக்கலம் கொடுக்கும் இடமாக அவரது இல்லம் அமைந்திருந்தது. அம்பாரை மாவட்ட தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளைப் பெற தன்னை அர்பணித்து வந்த நிலையிலே காலன் அவரைக் காவுகொன்று விட்டான். துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட  அன்னாரது ஆன்னாரது உடலம் கல்முனை பாண்டிருப்பு எல்லை வீதியான கல்முனை தரவைப் பிள்ளையார் அலய வீதியில் போடப்பட்டிருந்தது. அன்னாரது நினைவையொட்டி மட்டக்களப்பு மாவட்ட விஸ்வகர்ம சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த 32 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு நாட்டில் ஏற்படட்டுள்ள தற்போதையை அசாதாரண நிலை காரணமாக பிற்போடப்பட்டுள்ளது என்பதை அறியத் தருகின்றோம்.

தமிழர் விடுதலைக் கூட்டணி வட கிழக்கில் அனைத்து மாவட்டங்களிலும் போட்டடியிடும்.

மத்திய செயற்குழு கூட்டம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய செயற்குழு கூட்டம் 09.03.2020 காலை 10.30 மணியளவில் தலைவர் திரு.த.இராஜலிங்கம் தலைமையில் நடைபெற்றது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இருந்து 40க்கும்...

யானை கூட்டம் ஒன்று   அம்பாறை சடயந்தலாவை பகுதியை ஆக்கிரமிப்பு செய்து வருகின்றது

பாறுக் ஷிஹான் யானை கூட்டம் ஒன்று   அம்பாறை சடயந்தலாவை பகுதியை ஆக்கிரமிப்பு செய்து வருகின்றது.திடிரென அம்பாறை மாவட்டத்தின் உகணை பகுதியை ஊடறுத்து செல்லும் சடயந்தலாவை பகுதியில் உள்ள அறுவடை செய்யப்பட்ட வயல் நிலங்களை...

மட்டக்களப்பு – மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகத்தில் பொலிவடைந்த கிராமங்களை உருவாக்கும் வேலைத்திட்டத்தின்கீழ் சிரமதானமும், மரநடுகையும்...

(வவுணதீவு - எஸ்.சதீஸ்) இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் நாடுபூராவும் செயற்படுத்தப்பட்டுள்ள பொலிவடைந்த கிராமங்களை உருவாக்கும் வேலைத்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகத்தில் சிரமதானப்பணியும் மரநடுகையும் ஞாயிற்றுக்கிழமை (01.03.2020ம் திகதி)...

சாரணர் நூற்றாண்டு திருகோணமலை

திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியில் சாரணர் அமைப்பு 1920ம் வருடம் தோற்றுவிக்கப்பட்டது. இவ்வருடம் 100 வருடம் நிறைவு நிறைவு பெறுகிறது.இதனை முன்னிட்டு இன்று சனிக்கிழமை 2020.02.01 தபால்தலை வெளியீடு, சாரணர் ஸ்தாபகர் பேடன் பவுல்...

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் மரநடுகை

பசுமை திட்டத்தின் கீழ் மரநடுகை மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவில் இடம்பெற்றது. சகல கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் உள்ள பொது இடங்களையும் உள்ளடக்கிய வகையில் மரநடுகை இடம்பெற்ற அதேவேளை ஆற்றோரங்களில் கண்டல் தாவரமும் நடுகை...

புளியந்தீவு ரிதத்தின் வருட இறுதி கலை நிகழ்வு…

மண்முனை வடக்குப் பிரதேசத்தின் பிரசித்தி பெற்ற இளைஞர் கழகங்களுள் ஒன்றான புளியந்தீவு ரிதம் இளைஞர் கழகத்தின் வருட இறுதி கலை நிகழ்வும், சிறுவர் விளையாட்டு பரிசில்கள் வழங்கல் மற்றும் கௌரவிப்புக்கள் என்பன இன்றைய...

ஐக்கிய தேசிய கட்சி பிரபலங்கள் 10 பேர் தங்கள் அணியுடன் .மகிந்த ராஜபக்‌ஷ தகவல்

ஐக்கிய தேசிய கட்சி பிரபலங்கள் 10 பேர் தங்கள் அணியுடன் இணைந்துகொள்ள  கலந்துரையாடல் நடத்தியதாக மகிந்த ராஜபக்‌ஷ தகவல் வெளியிட்டுள்ளார். கடந்த வாரம் மூன்று சுற்று பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாக கூறியுள்ளார் மகிந்த ராஜபக்‌ஷ. தேர்தல் தொகுதிகளை வழங்குவதில்...

கோட்டா அப்துல் ராசிக் , ஹிஸ்புல்லாவுடன் செய்துகொள்ளப்பட்ட ரகசிய உடன்படிக்கைகள் என்ன ?

கோட்டாபய ராஜபக்ஷவால் ஹிஸ்புல்லா மற்றும் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் அப்துல் ராசிக் ஆகியோருடன் செய்து கொள்ளப்பட்டுள்ள இரகசிய ஒப்பந்தத்தில் உள்ள விடயங்கள் என்ன?என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என சிங்கள ஊடகம் ஒன்று...

ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழு மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தைச் சந்திப்பு…

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்திற்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (07) மட்டு ஊடக அமையத்தில் நடைபெற்றது. ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் குழுவின் நீண்டகாலக் கண்காணிப்பாளர்...

திருகோணமலை ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் மாநாடும், ஜனாதிபதி தேர்தல் பரப்புரைக் கூட்டமும்

கதிரவன் திருகோணமலை ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் மாநாடும், ஜனாதிபதி தேர்தல் பரப்புரைக் கூட்டமும் செவ்வாய்க்கிழமை 2019.11.05 மாலை திருகோணமலை அலஸ்தோட்டம் ஆனந்தபுரியில் அமைந்துள்ள கட்சியியின் அலுவலக மைதானத்தில் நடைபெற்றது. கட்சியின் செயலாளர நாயகமும் யாழ் மாவட்ட...

இரண்டு வீதிகளின் வேலைகளை எருவில் கிராமத்தில் ஆரம்பித்தார் அரச அதிபர்.

(எருவில் துசி) எருவில் அங்கத்தவர் வீதி மற்றும் ஐயனார் ஆலய வீதி என்பவற்றினை அரசாங்க அதிபர் திரு மா.உதயகுமார் அவர்கள் இன்று(24) ஆரம்பித்து வைத்தார். மன்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா...