விஷேட செய்திகள்

விவசாயிகள் பாதிப்பு மட்டக்களப்பு வாவியின் முகத்துவாரத்தினை திறக்க முயற்சி  

(மயூ.ஆமலை) மட்டக்களப்பு வாவியின் நீர் மட்டம் , வரத்து நீர் காரணமாக உயர்த்துள்ளமையினால் அறுவடைக்கு தயாராகவுள்ள நெல்  வயல்கள் நீரில் மூழ்கியுள்ளன.வாவியின் நீர்மட்டத்தை குறைப்பதற்காக வாவி நீர் கடலோடு சங்கமிக்கும் முகத்துவாரத்தை வெட்டி திறந்தது...

விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் உருவாக வேண்டும் என்பதே வீரவங்சவின் பிரார்த்தனை

போரில் உயிரிழந்த நபர்களுக்கு இழப்பீடு வழங்கும் யோசனை தொடர்பான நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச சுமத்தும் குற்றச்சாட்டில் உண்மையில்லை என ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகத்தில்...

தலைக்கவசத்துடன்வந்தநபர் மின்னல்வேகத்தில்5பவுண்தங்கச்சங்கிலி அறுப்பு!

காரைதீவில்சம்பவம்: பொலிசார் விசாரணை:  சந்தேகநபர் தலைமறைவு! (காரைதீவு  நிருபர் சகா)   தலைக்கவசத்துடன் வந்த நபர் கடையின் உரிமையாளர் அணிந்திருந்த 5பவுண் தங்கச்சங்கிலியை அறுத்தெடுத்து மின்னல்வேகத்தில் மோட்டார்சைக்கிளில் தப்பிச்சென்றுள்ளார்.   அவர்கள் தப்பிச்சென்ற மோட்டார்சைக்கிள் விளக்குகளை அணைத்தவாறு முன்பின் இலக்கத்தகடுகளை...

இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் அறிவிப்பு

இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் மூலம் யூன் மாதம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அனைத்து பரீட்சைகளும் குறிப்பிட்ட வகையில் இடம்பெறும் என்று இலங்கை பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போழுது நிலவும் தபால் பகிஷ்கரிப்பு காரணமாக தகுதியான பரீட்சாத்திகளுக்கான...

கேர்ணல் ரத்னபிரிய பந்துவின் பிரியாவிடை அவருக்கு மீண்டும் அதேபொறுப்பை வழங்குங்கள் விமல் ஜனாதிபதிக்கு கடிதம்

லெப்டினென்ட் கேர்ணல் ரத்னபிரிய பந்துவின் பிரியாவிடை நிகழ்வு தொடர்பில், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். மேலும், மக்களின் கோரிக்கைக்கு அமைய லெப்டினென்ட் கேர்ணல்...

இந்து விவகார பிரதி அமைச்சர் விவகாரம் மட்டக்களப்பில் நடந்த போராட்டம்.

க.விஜயரெத்தினம்) இந்து விவகார பிரதி அமைச்சர்  நியமனத்திற்கு மட்டக்களப்பில் இந்து மக்களின் ஒற்றுமை அமைப்பினர் எதிர்ப்பு போராட்டத்தை நடாத்தி தங்களின்  எதிர்ப்பை வெளிக்காட்டினார்கள். இந்து விவகார பிரதி அமைச்சராக காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டதற்கே  எதிர்ப்புத் தெரிவித்து...

பெரியநீலாவணையின் விடிவெள்ளி அமரர் வேதநாயகம் அதிபர் படுகொலை செய்யப்பட்டு இன்று 23 வருடங்கள்!

(பாண்டிருப்பு கேதீஸ்) பெரியநீலாவணை கிராமத்தை நேசித்த இந்த கிராமத்தின் கல்வி வளர்ச்சியில் கண்ணும் கருத்துமாக செயற்பட்ட பெரியநீலாவணை விஷ்ணு மகாவித்தியாலயத்தின் அதிபர் வேதநாயகம் அவர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்று (06.06.2018) ஆண்டுகள் 23 ஆகின்றது. பாடசாலையையும்...

அரசகரும மொழித்தேர்ச்சி வாய்மூலப் பரீட்சை

நாட்டின் தெற்கு , மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கேகாலை மாவட்டத்திலும் கடந்த 2018.05.26 , 27 மற்றும் 28ஆம் திகதிகளில் நடாத்த தீர்மானிக்கப்பட்டு காலவரையறையின்றி பிற்போடப்பட்ட அரசகரும மொழித்தேர்ச்சி வாய்மூலப் பரீட்சை...

சுவிஸ்ட்ஸர்லாந்து சூரிச் நகரில் மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக நூல் அறிமுக நிகழ்வு( வீடியோ)

சுவிஸ்ட்ஸர்லாந்து சூரிச் நகரில் ஞாயிற்றுக்கிழமை மாலை திருநாவுக்கரசு சிறிதரன் (சுகு தோழர்) அவர்களின் மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக நூல் அறிமுக நிகழ்வு திருமதி பத்மபிரபா தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் நூலுக்கான விமர்சன உரையை...

வந்தாறுமூலையில் ஆடை உற்பத்தி நிலையம்

செங்கலடி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஏர்முனை விசேட தேவையுடையவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஆடை உற்பத்தி நிலைய திறப்பு விழா நேற்று செவ்வாய்கிழமை மாலை வந்தாறுமூலை விஷன் வளாகத்தில் இடம்பெற்றது. அமைப்பின் தலைவர் எஸ்.கங்கேஷ்வரன்...

அரச நிறுவனங்களில் மொழி உதவியாளர்கள் 3300 பேர் இணைப்பு

அனைத்து அரச நிறுவனங்களிலும் அரசமொழிக்கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காக தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் பணியாற்றக்கூடிய மொழி உதவியாளர்கள் 3300 பேர் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். இதுதொடர்பில் தான் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அங்கீகாரம் கிடைத்திருப்பதாக கொழும்பு லக்ஸ்மன் கதிர்காமர் மத்திய...

வாழைச்சேனை தவிசாளர் களத்தில்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பெரிய கோராவெளி கண்ணகியம்மன் திருக்குளித்தி திச்சடங்கிற்கான ஏற்பாடுகளை வாழைச்சேனை கோறறைப்பற்றுப் பிரதேச சபை தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித் பார்வையிட்டர். பெரிய கோராவெளி கண்ணகியம்மன் திருக்குளிர்த்தி சடங்கு...