மட்டக்களப்பு வாசம் உதவும் கரங்கள் அமைப்பினால் மாங்கேணிக்கு உணவுப்பொருட்கள்.

மட்டக்களப்பு வாசம் உதவும் கரங்கள் அமைப்பினால் வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மாங்கேணி மற்றும் பால்சேனை போன்ற கிராமங்களில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் வாழம் குடும்பங்களுக்கு ஒரு தொகுதி உலர் உணவுப் பொருட்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.

அத்துடன் கொரோனா வைரஸ் நோய் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவது தொடர்பான விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களும் மக்களிடையே வினியோகிக்கப்பட்டது.

குறித்த பிரதேசத்தின் சமூக அமைப்புக்கள் விடுத்த வேண்டுகோளினை அடுத்து இவ் உதவி வழங்கப்பட்டதாக வாசம் உதவும் கரங்கள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் தெரிவித்தார்.

நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோணா வைரசின் காரணமாக அன்றாடம் பொருளாதார ரீதியாக பல குடும்பங்கள் வாழ்வாதரம் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றனர்.

நாளாந்த கூலித் தொழில் புரியும் பலர் தமது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றனர்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு வழங்கும் பணியில் பல்வேறு அமைப்புக்கள் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.