சீ.மூ இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளரின் மேதின வாழ்த்து செய்தி.

(எருவில் துசி) ‘வாழ்க தொழிலாளி வளர்க சமூகம்’ உலகலாவிய ரீதியில் தொழிலாளர்கள் தினத்தை கொண்டாடுகின்ற தினமாகிய இன்று(01)
மக்கள் தமது உணவிற்;கே அவதியுறும் விதமாக கொரோனா மக்களை ஆட்கொண்டிருக்கும் இச் சந்தர்ப்பத்தில்  அன்றும் இன்றும் என்றும் எப்போதும் தொழிலாளிகள் நலமாகவும் வளமாகவும் வாழ்வதற்கு எனது மானசீகமான வாழ்த்துக்களை  தெரிவித்துக்கொக்கின்றேன்.

ஒரு மனிதனின் அடிப்படை உணவாகும் அதற்கு கையோந்தும் நிலைக்கு இன்று தொழிலாளி மாறிவிட்டான் என்பதுதான் இன்றைய சமூகத்தின் அவலநிலையாக காணப்படுகின்றது. பல கம்பணிகளை நடாத்துவதற்கு கூலியாட்களை கொண்டு
வேலை செய்வதென்பது இன்றைய சூழ்நிலையில் முயல்கொம்பாகி அபாயகரமான விடயமாக காணப்படுகின்றது. இதனால் முதலாளிமார் தமது தொழில் நிலையங்களை நடாத்துவதிலும் பாரிய சிக்கல்களுக்கு மத்தியில் உலகம் காணப்படுகின்றது அது எமது நாட்டுக்கும் விதிவிலக்கல்ல. இது தொழிலாளி இல்லாமல் முதலாளி இல்லை தொழிலாளிதான் முதலாளிகளை உருவாக்குகின்றான்
என்பதையும் தொழிலாளி முதலாளி சமத்துவத்தை அனைவருக்கும் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்துவதையும்  காணமுடிகின்றது.

தொழிலாளிதான் தீர்மானிக்கின்றான் அரசியல் வாதிகளை அவன் நிற்கதியாகி தமது வாழ்வாதரத்திற்கு அல்லல்படும் இச்சந்தர்ப்பத்தில் தேர்தல் அவசியமானதா என்பதை இன்றைய அரசு சிந்திக்க தவறுவது தொழிலாளியின் நலன்சார்விடத்தில்
அக்கறைகாட்டுகின்றதா என்பதை சிந்திக்கவேன்டியுள்ளது. தனியார் தொடர்மாடி குடியிருப்புக்களில் வாடகைக்கு வாழ்கின்ற அன்றாட தொழிலாளிகளுக்கு அரசினால் வழங்கப்படும் 5000ரூபா கிடைப்பதில் அங்கு ஒருமுதலாளிக்கு மாத்திரம் நண்மையுண்டாகின்றது. அதுமாத்திரமின்றி தோட்ட தொழிலாளி மற்றும் பலர் 5000ரூபா கொடுப்பணவு கிடையாது வீதிகளில் போராடுவது கண்கூடு.

இலங்கையினது முதுகெலும்பாக ஏற்றுமதி பொருளாதாரம் அமைகின்றது அதற்கு மலையக தொழிலாளிகளின் பங்கு  அளப்பரியதாகும் அதுமட்டுமற்றி ஆடைதொழில்சார் தொழிலாளிகளும் தம்மையும் தமது குடும்பத்தையும் கொண்டு செல்வதற்கு படும் அவலம் பரிதாபத்திற்குரியதாகும். எது எவ்வாறாயினும் இன்றைய தொழிலாளி நாளைய முதலாளியாக வாழ்வதற்கு எனதும் எனது
அமைப்பசார்பாகவும் வாழ்த்தக்களை சமர்பணம் செய்கின்றேன்.