ஏன் தமிழ் கட்சிகளின் வேட்பாளர்கள் முஸ்லிம்களிடம் வாக்கு கேட்பதில்லை?’ஐக்கிய சமாதான கூட்டமைப்பு கட்சியின் பிரதி செயலாளர் நாயகம்

முஸ்லிம் வேட்பாளர்கள்தானே இவ்வளவு காலமாக தமிழ் மக்களிடம் வாக்கு கேட்டு அலைகிறார்கள்.ஏன் தமிழ் கட்சிகளின் வேட்பாளர்கள் முஸ்லிம்களிடம் வாக்கு கேட்பதில்லை என காத்தான்குடியைச்சேர்ந்தவரும், முன்னைநாள் ஈரோஸ் வேட்பாளரும்,  ஐக்கிய சமாதான கூட்டமைப்பு கட்சியின் பிரதி செயலாளர் நாயகம் Haaris Ali Uthuma  தனது முகப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் ஆள நினைக்கும் தமிழ் இனம் முஸ்லிம்களை நேர்மையாக ஆள வேண்டும் என்ற எண்ணமில்லையா?அல்லது சிங்களம் தமிழரை அடிமையாக வைத்திருப்பது போன்று வைத்திருக்கும் எண்ணமா?

எதிர் காலத்தில் தமிழ் கட்சிகள் முஸ்லிம் வேட்பாளர்களை உள்ளீர்த்து அரசியல் செய்ய முன்வர வேண்டும். 89க்கு பின் முஸ்லிம்களை வேட்பாளர்களாக இணைப்பது முற்றாக நின்று போய்விட்டது.முஸ்லிம்களை புறக்கணித்து அரசியல் செய்வது தமிழ் இனத்தின் ஆளும் கனவை முற்றாகவே இல்லாமலாக்கிவிடும் எனவும் தெரிவித்துள்ளார்.

supeedsam Epaper 01.05.2020