அனைத்து எம்பிக்களும் திங்கட்கிழமை அலரிமாளிகையில்.

கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தின் அனைத்து முன்னாள் எம். பிக்களையும்
 வரும் திங்கட்கிழமை காலை 10 மணிக்கு அலரி மாளிகைக்கு அழைத்துள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச

 

பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் கூட்டாக அறிக்கை விடுத்துள்ள நிலையில் நேற்று அதுபற்றி அமைச்சரவையில் ஆராயப்பட்டது.
அதன் அடிப்படையில் இந்த சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது தற்போதைய நிலைமை குறித்து ஆராய்ந்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.