மட்டு மாவட்ட முன்னாள் அரச அதிபரின் ஏற்பாட்டில் தொடரும் நிவாரணப்பணிகள்

நிவாரணப்பணி 5ம் கட்டம்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக தமது வருமானங்களை இழந்துள்ள அன்றாடம் தொழிலில் ஈடுபடுகின்ற மட்டக்களப்பு மாவட்டத்தின் தாந்தாமலை, 38ம் கொலனி, கோட்டைக்கல்லாறு மற்றும் மட்டக்களப்பின் சில புறநகர் பகுதிகளை சேர்ந்த 200 குடும்பங்களுக்கு லண்டனை அமைவிடமாக கொண்டு இயங்கும் MIOT அமைப்பின் சார்பாக Dr.வேலாயுதப்பிள்ளை , Dr.நிரஞ்சன், Dr காந்தா நிரஞ்சன் மற்றும் MIOT உறுப்பினர்களின் நிதியுதவி
மூலம் முன்னாள் மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ரூ230,000/- பெறுமதியான உலர் உணர்வு பொருட்கள்  வழங்கி வைக்கப்பட்டது.

இக்கட்டான சூழ்நிலையில் MIOT அமைப்பினால் வழங்கப்பட்ட இந்த உதவிக்கு மக்கள் தமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர் supeedsam Epaper 30.04