இளைஞர்கள் ஊடாக வீட்டுத் தோட்டத்தினை மேம்படுத்துவோம் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் சட்டத்தரணி ஹபீப் றிபான்

தொழிநுட்பமயமாக்கல் அதிகரித்துள்ள இக்காலப்பகுதியில் தொலைபேசிகளில் ஏற்பட்டுள்ள நவீனமயமாக்கல் காரணமாக அதிகமான இளைஞர்கள் சமூகவலைத்தளங்களிலும் தொலைபேசிகளினூடான விளையாட்டுக்களிலுமே அதிகமான நேரத்தை செலவழிக்கின்றார்கள்.

அதனை குறைத்து இவ்வாறான அனர்த்த நிலைமைகள், விடுமுறை தினங்கள் என்பவற்றை வீட்டுக்கும் நாட்டிற்கும் பயனுள்ளதாக மாற்றியமைக்கும் நோக்கிலும் எமது பிரதேச இளைஞர்களை வீட்டுத் தோட்டம் செய்வதனை தூண்டும் நோக்கிலும் “வீட்டுத் தோட்டத்தினூடாக சுகாதாரமான உணவுகள்” எனும் தொனிப் பொருளின் கீழ் எமது பிரதேசத்தில் உள்ள பல இளைஞர்களின் வீடுகளுக்கு வீட்டுத் தோட்டத்திற்கான செடிகளை இன்று (29) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற வேட்பாளர் சட்டத்தரணி. ஹபீப் றிபான் அவர்கள் வழங்கி வைத்தார்.
மேலும் இன்ஸாஅல்லாஹ் எதிர்வரும் காலங்களில் போதைவஸ்து பாவனையற்ற புத்தாக்கம் கொண்ட சிறந்த இளைஞர் சமுதாயத்தினை உருவாக்குவதற்கு பல்வேறு செயற்திட்டங்களை வடிவமைத்திருப்பதாகவும் அதன் முதற்கட்டமாக சிறிய அளவிலான முயற்சியாக இந்த வீட்டுத் தோட்ட செயற்திட்டத்தினை ஆரம்பித்துள்ளதாகவும் ஏனைய செயற்திட்டங்களை சிறப்பாக எதிர்வரும் காலங்களில் நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்supeedsam Epaper 30.04