கைதாவதை தடுக்கும் வகையில் ரிசாத் அடிப்படை மனுதாக்கல்.

முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை

மீறல் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலின் போது இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் வாக்காளர்களுக்கு போக்குவரத்து வசதி வழங்கியமை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்படுவதற்கு  எதிராக அவர் இவ்வாறு அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல் செய்துள்ளார்.