தலைவர் பிரபாகரனின் பெயரை ஞாபகப்படுத்துகின்ற கட்சி தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி.

வெள்ளிமலை.

தமிழ் மக்களின் காவலனாக செயற்படுவேன்.

மற்றவர்களைவிட ஒருவாக்காவது அதிகமாகப்பெறுவேன்.

மட்டக்களப்பில் படைமுகாம்களை அகற்றினேன்.

தலைவர் பிரபாகரனின் பெயரை ஞாபகப்படுத்துகின்ற கட்சி தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற வேட்பாளர் ஞா.கிருஸ்ணபிள்ளை(வெள்ளிமலை)  தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சாமித்தம்பி ரவிந்திரனுக்கு வழங்கியுள்ள பிரத்தியேக பேட்டியொன்றிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்துத்தெரிவிக்கையில் தமிழரசுக்கட்சியின் செயலாளரின் அறிவுறுத்தலுக்கமைய நான் தமிழர் விடுதலைக்கூட்டணியிலிருந்து விலகி தமிழரசுக்கட்சியின் செயலாளரிடம் கடிதத்தை ஒப்படைத்து தமிழரசுக்கட்சியில் அங்கத்தவம் கோரியிருந்தேன் ஒருவருடங்களுக்கு பின்பு எனக்கு அங்கத்துவம் தரமுடியாது என்று என்னை ஏமாற்றி விட்டார்கள் அதனால் மாற்றுவழி இல்லாமல் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியில் இணைந்து கொண்டேன்.

மட்டக்களப்பு மாவட்டத்துக்குரியதும்,தலைவர் பிரபாகரனின் பெயரை ஞாபகப்படுத்துகின்ற கட்சியான ரி.ஏம்.வி.பி கட்சியில்போட்டியிட வேண்டியேற்பட்டது.

ஆயிரம் முறை கூறுகின்றேன் என் மக்கள் என்னை தெரிவு செய்து நான் கட்டாயம் பாராளுமன்ற உறுப்பினராகுவேன்.அத்துடன் எந்தக்கட்சியில் கேட்டாலும் கேட்பவர்களைவிட ஒருவாக்காவது கூடுதலாக பெறுவேன் இது உறுதி.பாராளுமன்ற உறுப்பினரானதும் தமிழ் மக்களின் காவலனாக இருந்து அவர்களைப்பாதுகாத்து அபிவிருத்தி,தொழில், உரிமைக்காகபோராடுவேன்.

எமது கட்சி இத்தேர்தலில் இரண்டு ஆசனங்களைப்பெறும்.பட்டிருப்புத்தொகுதிக்கு மட்டுல்ல மட்டக்களப்பு மாவட்டத்தையே செழிப்பாகமாற்றுவோம்.

நான் இராணுவம்,விசேடஅதிரடிப்படை, விடுதலைப்புலிகளுடன் அந்நியோன்னியமாக பழகினேன் அதனால் தளபதி ரமணனுடன் கதைத்து படுவான்கரைக்குள் நுழைந்த ஏழு பொலிஸ்அத்தியட்சகர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்தேன்.அதேபோன்று முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டிருந்த விடுதலைப்புலிகளையும் அரசமட்டங்களிடம் கதைத்து விடுதலை செய்துள்ளேன்.

அத்துடன்களுவாஞ்சிக்குடி, குறுமன்வெளி,செட்டிபாளையம், தேக்கன்சேனை போன்ற இடங்களில் அமைந்துள்ள படைமுகாங்களில்அரச உயர்மட்டங்களில் கதைத்து அகற்றினேன் என தெரிவித்துள்ளார்