வாழைச்சேனையில்இராணுவப்புலனாய்விற்கு கிடைத்த தகவல் சிக்கியது போதைப்பொருட்கள்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிறைந்துறைச்சேனை பகுதியில் சட்டவிரோதமான முறையில் ஐஸ் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் மற்றும் ஐஸ் ஹெரோயின் போதைப் பொருட்களும் திங்கட்கிழமை காலை கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தவலையடுத்து பிறைந்துறைச்சேனை பிரதேசங்களில் மேற்கொண்ட நடவடிக்கையின் போது ஐஸ் ஹெரோயின் வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளனர்;.

வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவ புலனாய்வு அதிகாரிகளின் தகவலின் அடிப்படையில் 16 கிராம் எடையுடைய 115 ஐஸ் போதைப் பொருள் பைகள் மற்றும் ஒரு சந்தேக நபரை வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர் தொடர்ந்தும் போதைப் பொருள் வியாபாரம் செய்பவர்கள் என்றும், இவர் இதற்கு முன்னரும் கைது செய்யப்பட்டவர்கள் என்றும், இவரை வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.

ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டதற்கு இணங்க எதிர்வரும் மே மாதம் 11ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எச்.எம்.முஹமட் பஸீல் உத்தரவிட்டுள்ளார்