மீன் வியாபாரியே 304ஆவது கொரோனா தொற்றாளராகப் பதிவு

இலங்கையில் இன்று  304ஆவதாக உறுதிபடுத்தப்பட்ட கொரோனா தொற்றாளர் பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய மீன் வியாபாரி என பிலியந்தல சுகாதார சேவை வைத்திய அதிகாரி இந்திக எல்லாவல தெரிவித்துள்ளார்.

பிலியந்தல பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட முதலாவது கொரோனா தொற்றாளர் இவரென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்குரிய அடையாளம் காணப்பட்டதையடுத்து, இன்று மாலை கொத்தலாவல பாதுகாப்பு மருத்துவ பீட வைத்தியசாலைக்குக் கொண்டுச் செல்லப்பட்டு, அங்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனைகளின் போது இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன் இவர் இன்று பகல் சென்ற குறித்த பிரதேசத்திலுள்ள சட்டத்தரணி, கிராம உத்தியோகத்தர் ஆகியோரின் வீடுகளிலுள்ள 11 பேரை சுயதனிமைக்குட்படுத்தியுள்ளதாகவும் இந்திக எல்லாவல தெரிவித்துள்ளார்.