வேம்பு வேண்டும்

வேம்பு வேண்டும்

வேக்காடு போக்கிட
வேக்காளம் அகன்றிட
வேகம் நீங்கிட
வேசறவு இல்லாமலாயிட

வேம்பு வேண்டும் வேம்பு வேண்டும்
வீட்டில் ஒரு வேம்பு வேண்டும்

நிழல் கொடுத்திட
நிதம் கிருமி அழித்திட
நீண்ட ஆயுள் பெற்றிட
நிலைக்கும் பயன்பெற்றிட

வேம்பு வேண்டும் வேம்பு வேண்டும்
வீட்டில் ஒரு வேம்பு வேண்டும்

பட்டையிலும் கட்டையிலும்
தளிரிலும் இலையிலும்
காயிலும் கனியிலும்
மருந்துகள் உருவாக்கிட

வேம்பு வேண்டும் வேம்பு வேண்டும்
வீட்டில் ஒரு வேம்பு வேண்டும்

பூவில் வடகமும்
பழத்தில் எண்ணெய்யும்
எண்ணெய்யில் அழகுசாதனப் பொருட்களும்
புண்ணாக்கில் பூச்சி கொல்லியும் செய்திட

வேம்பு வேண்டும் வேம்பு வேண்டும்
வீட்டில் ஒரு வேம்பு வேண்டும்

நற்காற்றை சுவாசிக்க
நலமுடன் வாழ
ஊன் உடல் நலனோம்ப
மனைகள் தோறும்

வேம்பு வேண்டும் வேம்பு வேண்டும்
வீட்டில் ஒரு வேம்பு வேண்டும்