இவர்கள் பரிந்துரைத்தால் மே மாத இறுதிப்பகுதியில் தேர்தல்?

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், நிபுணர் டாக்டர் அனில் ஜசிங்க மற்றும் ஜனாதிபதி பணிக்குழு தலைமை லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோரின் ஒப்புதல் அளிக்கப்பட்டால், நாடாளுமன்றத் தேர்தல் மே கடைசி வாரத்தில் நடைபெறும் என்று தேர்தல் ஆணையத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாட்டின் தற்போதைய நிலைமையை மறுஆய்வு செய்வதோடு, தற்போது வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல்களுக்கான எதிர்கால நடவடிக்கை குறித்து விரிவான கலந்துரையாடலை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது,