நாசிவந்தீவு கிராமத்திலுள்ள வறிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள்

வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நாசிவந்தீவு கிராமத்திலுள்ள வறிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் இன்று வெள்ளிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.

வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும், சமூக சேவையாளருமான க.கமலநேசனால் 50 குடும்பத்துக்கான உலர் உணவுப் பொருட்கள் அடங்கலான பொதிகள் வழங்கப்பட்டது.

இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினரால் வழங்கப்பட்ட அரிசி மற்றும் வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும், சமூக சேவையாளருமான க.கமலநேசனின் நிதி பங்களிப்புடன் சேர்த்து நாசிவந்தீவு கிராமத்தில் உள்ள வறிய குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

இதன்போது கோறளைப்பற்று பிரதேச இளைஞர்கள், கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் எஸ்.விக்னேஸ்வரன் ஆகியோர் வீடு வீடாக சென்று உதவிகளை வழங்கி வைத்தனர்.

குறித்த நாசிவந்தீவு கிராமமானது மிகவும் வறிய கிராமம் என்பதுடன், இங்கு பெரும்பலானோர் அன்றாட தொழில்களை தங்களது ஜீவனோபாய தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர்.