கல்முனை பொதுப்பணி மன்றத்தினால் கிருமிநாசினிகள் தெளிக்கும் வேலைத்திட்டம

எம்.எம். ஜெஸ்மின்
கொரொனா வைரஸ் தொற்றை முற்றாக நீக்கும் நோக்கோடு கிருமிநாசினிகள் தெளிக்கும் வேலைத்திட்டம் இன்று(17)கல்முனை பிரதேசம் பூராகவும் நடைபெற்றது.
கல்முனை மாநகர சபை அனுசரணையுடன் கல்முனை பொதுப்பணி மன்றம் இணைந்து இவ்கிருமிநாசினிகள் தெளிக்கும் வேலைத்திட்டம் இடம்பெறுகின்றது.
நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஏ.எம் ரோஸன் அக்தர்,ஏ.சி.ஏ சத்தாத்,எம்.எஸ்
எம் நிசார் (ஜேபி),பொதுப்பணி மன்றத்தின் தலைவர் தொழிலதிபரான அல்ஹாஜ் எஸ்.எல் அமீர்(நயீர்)உட்பட அமைப்பின் அங்கத்தவ்ர்களும் கலந்து கொண்டனர்.