கொளுத்தும் வெயிலில் கொக்கட்டிச்சோலையில் கூடியிருந்த மக்கள்

மட்டக்களப்பு மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் இன்று(16) வியாழக்கிழமை தளர்த்தப்பட்ட நிலையில்,  அத்தியாவசிய பொருட்களை  பெற்றுக் கொள்வதற்காக கொக்கட்டிச்சோலை பகுதியில் அதிகளவான மக்கள் குழுமியிருந்தனர்.

சமூக இடைவெளியை பேணும் பொருட்டு குறித்த, மண்முனை தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் கிராமங்களில் அமைந்துள்ள விளையாட்டு மைதானங்களில் தற்காலிக சந்தைகள் ஏற்படுத்தப்பட்டு சனநெரிசலை குறைக்கும் செயற்பாட்டை பிரதேச சபையினரும்,  பிரதேச செயலகத்தினரும் மேற்கொண்டிருந்தனர்.
எனினும் வங்கி சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக அதிகளவான மக்கள் நீண்ட வரிசையில் வீதியில் நின்று சேவையை பெற்றுக் கொண்டமையை காணமுடிந்தது.
மேலும் பணம் பெறும் இயந்திரங்களின் முன்னாலும்   அதிகளவான மக்கள் நீண்ட வரிசையில் கொளுத்தும் வெயிலில் நின்றும் பணத்தினை பெற்றுக் கொண்டனர்.