யாழ்பாணத்திற்கு தொழிலுக்காகச் சென்ற 35 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு

(எஸ். சதீஸ்)
மட்டக்களப்பு மாவட்டம் வாகரை பிரதேசத்தில் கொரோனா தொற்று நோயை தடுக்கும் வகையில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தினால் அன்றாடம் தொழில்வாய்ப்பினை இழந்த குடும்பங்களுக்கு முனைப்பு நிறுவனத்தினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

முனைப்பு சிறிலங்கா நிறுவனத்தின் தலைவர் மாணிக்கப்போடி சசிகுமார் தலைமையில் இந்த செயற்திட்டம் இடம் பெற்றது.

இதன்போது வாகரை பிரதேசத்திலிருந்து யாழ்பாணத்திற்கு தொழிலுக்காகச் சென்ற 35 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கும், ஏனைய தெரிவுசெய்யப்பட்ட ஒருதொகுதிக் குடும்பங்களுக்கும் இந்த உலர் உணவுப் பொதுகள் வழங்கிவைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நிர்க்கதியாகியிருக்கும் 35 தொழிலாளிகளுக்கு உணவுகளும், இத் தொழிலாளிகளின் குடும்பங்களுக்கும் ஏனைய தெரிவுசெய்யப்பட்ட ஒருதொகுதி குடும்பங்களுக்கும் உலர் உணவுப் பொதிகளையும் தாம் வீடுகளுக்குச் சென்று வழங்கியதாக முனைப்பு சிறிலங்கா நிறுவனத்தின் தலைவர் மாணிக்கப்போடி சசிகுமார் தெரிவித்தார்.