போற்றுதும் போற்றுதும்.

போற்றுதும் போற்றுதும்,
இயற்கையைப் போற்றுதும்
இயற்கையைப் போற்றுதும்
இயற்கையில் இணைந்த
உயிர்களைப் போற்றுதும்

மனிதரைப் போற்றுதும்
மனிதரைப் போற்றுதும்
இயற்கையை மதிக்கும்
மனிதரைப் போற்றுதும்
உயிர்களை மதிக்கும்
மனிதரைப் போற்றுதும்

மனிதரைப் போற்றுதும்
மனிதரைப் போற்றுதும்
மனிதரை மனிதராய்
மதிக்கும் மனிதரை
மனிதரைப் போற்றுதும்
மனிதரைப் போற்றுதும்.

சி.ஜெயசங்கர்

 

யார்?; யார்?;

ஓடி விளையாடி
ஆடுகளுடன் ஓடி
மேய்க்கும் மெய்யழகை
வரைந்தவர் யார்?
வண்ணமாய்ச் சிறுவரில்
வரைந்தவர் யார்?

துள்ளித்; துடியாடி
துடுக்கோடவர் பாடி
வாழும் பேரழகை
வனைந்தவர் யார்?
வடிவமாய்ச் சிறுவரில்
வனைந்தவர் யார்?

நல்ல அறிவோடும்
வல்ல மனதோடும்
வளரும் ஆற்றல்களை
வளர்ப்பவர் யார்?
ஆளுமையை சிறுவரில்
வளர்ப்பவர் யார்?;
சி.ஜெயசங்கர்