இராமகிருஷ்ண மிஷனால் வெல்லாவெளி பிரதேசத்தில் உலருணவுப் பொதிகள் வழங்கிவைப்பு

நாட்டில் நிலவிவரும் அசாதாரண சூழ்நிலை காரணமாக ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர், இதில் கிராமப்புறங்களில் உள்ள குடும்பங்களின் நிலை பெரும் பாதிப்புக்குளாகியுள்ளது.

மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் வெல்லாவெளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிராமங்களான மண்டூர் தெற்கு-95, மண்டூர் 182 ஆம் கிராமம்-60, தம்பலவத்த-80, கணேசபுரம்-80, மாலயர்கட்டு-58, மண்டூர் 03 ஆம் கிராமம்-82, சங்கர்புரம்-75, பாலமுனை-100, மண்டூர் கோட்டமுனை-50 குடும்பங்கள் என குறித்த கிராமங்களில் வசிக்கும் 680 குடும்பங்களுக்கான உலருணவுப் பொருட்களை இன்று வழங்கிவைத்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் வெல்லாவெளி பிரதேச செயலாளரின் அனுமதிக்கு அமைவாக குறித்த கிராமங்களில் உள்ள குடும்பங்களுக்கு இராமகிருஷ்ண மிஷன் சுவாமிகள் உடனான குழு நேரடி விஜயம் மேற்கொண்டு அங்குள்ள மக்களுக்கு உலருணவு பொதிகளை கையளித்தனர்.