தமிழினத்தை கேவலப்படுத்தும் செயலாகவேநான் பார்க்கின்றேன். சேயோன் கண்டனம்.

தமிழ் மக்களுடைய விடுதலைப் போராட்டம் உரிமை மீட்பு போராட்டமாக உலகத் தமிழ்இனத்தின்அங்கீகாரத்துடன் இறுதிவரை நடைபெற்றது. இலங்கையை ஆண்ட எந்த அரசுகளும் தமிழ்மக்களைகௌரவமாக எந்த காலகட்டத்திலும் நடத்தியதில்லை. இதன் காரணமாகவே தமிழர்கள் தமதுசுயநிர்ணயஉரிமைக்காக போராட ஆரம்பித்து அது ஆயுதப் போராட்டமாக பரிணமித்தது.

இந்நிலையில் 32 க்கு மேற்பட்டதமிழ் அமைப்புகள் போராட புறப்பட்டு சுயநலத்திற்காக பல பிரிவாக பிரிந்துஇறுதியில் எம்மை வஞ்சித்தஅரசுகளுடன் இணைந்து எம்மை அளித்த வரலாறு இறுதிவரை தமிழ் மக்களின்விடுதலைக்காக,கொள்கைக்காக போராடியது விடுதலைப்புலிகள் மாத்திரமே.இதை நான் சொல்லவில்லைஉலக இராணுவஆய்வாளர்களே கூறி இருக்கின்றார்கள். ஏன் இறுதி யுத்தத்தில் பங்கு கொண்ட ராணுவதளபதிகளே ஒழுக்கம்சார்ந்து குற்றம் சாட்டப்படாத அமைப்பாக இன்றும்  பார்க்கின்றார்கள்.இன்றையபாதுகாப்பு செயலாளரும்முன்னாள் இராணுவ தளபதியுமான கமாண்டர் குணரட்ன எழுதிய நந்தி கடலுக்குசெல்லும் பாதை எனும் நூலில் எங்களுக்கு எதிராக ஆயுதம்தூக்கி போராடினாலும் ஒழுக்க ரீதியானகட்டமைப்புகளை அவர் மெச்சி சொல்லதயங்கவில்லை.விடுதலைப்புலிகளிடம் இருந்து பல புகைப்படங்கள்வீடியோக்கள் கைப்பற்றப்படும் அவைஎதிலும் அதன் தலைவரோ,போராளிகளோ மதுகிண்ணங்களுடனோ,களியாட்ட நிகழ்வுகளிலோ கணப்படஇல்லை என கூறுகிறார் .

இது இவ்வாறு இருக்க வரலாறு தெரியாமல் பிதற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளிர்அணித்தலைவி அதன் தலைவனான பிள்ளையானிடம்  கேட்டு பல புதிர்களுக்கான விடைகளைகேட்டுக்கொள்ளமுடியும்.

தமிழருக்கு இருக்கின்ற ஒழுக்க குணத்தையும் பண்பாட்டு ரீதியான கோட்பாடுரீதியானகோட்பாடுகளையும்இப்படிப்பட்டவர்களின் சுயநல சிந்தையால் தமிழீனம் இன்றும் இழிநிலை காண்கின்றதுஎன்பது இப்போதாவதுபலருக்கு புரியும். இது இவ்வாறு இருக்க கிழக்கு புலிகள் என்று மார்தட்டியநேரத்தில்தான் கிழக்கில் பலபடுகொலைகள் ஆட்கடத்தல்கள் எல்லாம் மேற்கொண்டது

இதற்கு அதன் பிற்பட்ட காலத்தில்கிழக்கை ஆண்ட நீங்கள் பொறுப்பை ஏற்றுக் கொள்வீர்களா? இவ்வாறானவர்களின் இளி நிலையான இந்தகருத்து முள்ளிவாய்க்காலில் கொத்துக்கொத்தாக அழித்தவேதனையை மறந்து மன்னித்து இயல்பு வாழ்வில்கலந்து வாழும் தமிழினத்தை கேவலப்படுத்தும் செயலாகவேநான் பார்க்கின்றேன். இதை மிகவும் வன்மையாககண்டிக்கிறேன் என இலங்கை தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணித்தலைவர்  கி.சேயோன்  அதனது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.