வாகனங்களுக்கான தண்டப்பணம் – செலுத்துவதற்கு நிவாரண காலம்

வாகனங்களுக்கான தண்டப்பணத்தை தபால் அலுவலகங்கள் மூலம் செலுத்துவதற்கான நிவாரண காலத்தை இலங்கை அஞ்சல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்தோடு இதனை செலுத்துவதில் ஏற்படும் தாமத்திற்கான மேலதிக தண்டப்பணமும் தற்காலிகமாக அகற்றப்பட்டுள்ளது.

இதுதொடi;பாக தபால் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

இலங்கை அஞ்சல் திணைக்களம்

2020.04.08

ஊடக அறிக்கை

 

வாகனங்களுக்கான தண்டப்பணத்தை தபால் அலுவலகங்கள் மூலம் செலுத்துவதற்கான நிவாரண காலம் …..
மேலதிக தண்டப்பணத்தை அகற்றுதல்

இலங்கைப் பொலிஸாரினால் 2020 மார்ச் மாதம் 1ஆம் திகதி அல்லது அதன் பின்னர் வழங்கப்பட்டுள்ள உள்ளூர் வாகன தண்டப்பண ஆவணம், 14 நாட்கள் கடந்தமை தொடர்பில் எந்தவித மேலதிக தண்டப்பணத்தையும் அறவிடப்படாமல் செலுத்துவதற்காக , பொதுவான கடமைகளுக்காக தபால் மற்றும் உப தபால் அலுவலகங்கள் திறக்கப்பட்ட பின்னர் நிவாரண காலத்தை வழங்குவதற்கு இலங்கை தபால் திணைக்களத்தினால் பொலிஸ் திணைக்களத்தில் உடன்பாட்டு எட்டப்பட்டதற்கு அமைவாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை அறிவிக்கின்றோம்.

மேலே குறிப்பிடப்பட்ட அறிக்கையை ஊடகத்தின் மூலம் விளம்பரப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

ரஞ்சித் ஆரியரத்ன
தபால் மா அதிபர்
தலைமையகம்