கன்னங்குடாவில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்குமான நிவாரணம் வழங்கப்பட்டது.

ஆட்கொல்லி நோயான கோவிட் 19 கொரோணா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்குச் சட்டத்தை அரசு அமுல்படுத்தியுள்ள நிலையில் அன்றாடம் கூலித் தொழில் செய்ய முடியாதவர்களின் நாளாந்த ஜீவநோபாயத்திற்கும் மற்றும் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்குமான நிவாரணம் வழங்கும் நிகழ்வு  கன்னங்குடா கிராம சேவகர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கன்னங்குடா மக்களிற்கு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகரின் வேண்டுகோளிற்கிணங்க மட்டக்களப்பு எஸ்.எஸ்.ஆர் கண்ஸ்ரக்ஷன் பிரைவேட் லிமிட்டட் உரிமையாளரும் மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் மற்றும் விவசாய சம்மேளனத்தின் உப தலைவரும் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சாரணர் இயக்கத்தின் உதவி மாவட்ட ஆணையாளருமான பி. சசிகுமாரின் சொந்த நிதியிலிருந்து கன்னங்குடா கிராம சேவகர் பிரிவிலுள்ளவர்களுக்கு தலா ரூபா 1000 பெறுமதியான 100 உலர் உணவுப் பொதிகள் கன்னங்குடா கிராம சேவகரிடம் ஒப்படைக்கப்பட்டு தகுதியானவர்களுக்கு வழங்கப்பட்டன.

குறித்த உணவுப் பொதிகள் மன்னார் மற்றும் நுவரெலியா ஆகிய இடங்களிலும் தலா ரூபாய் 1000 பெறுமதியான 100 உலர் உணவுப் பொதிகள் வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சாரணர் இயக்கத்தின் மாவட்ட ஆணையாளர் விவேகானந்தன் பிரதீபன் உதவி மாவட்ட ஆணையானர் ஐ. கிரிஸ்டி ஆகியோர் கலந்து கொண்டு உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தனர்.