கூலித்தொழில் புரியும் வறிய மக்களுக்கு உதவி.

கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட ஊரடங்குச் சட்டத்தினால் பாதிக்கப்பட்ட கூலித்தொழில் புரியும் வறிய மக்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையினூடாக உலருணவுப் பொதிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையினூடாக சுவிஸ் வேர்ண் ஞானலிங்கேஸ்வரர் ஆலயம் மற்றும் சைவநெறிக் கூடத்தினதும் நிதி உதவி மூலம் கூலித்தொழில் புரிந்து வாழும் மற்றும் சமுர்த்தி உதவிகள் அற்ற வறிய குடும்பங்களின் உணவுத் தேவையினை நிறைவேற்றும் பொருட்டு உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டது.

அந்தவகையில் கொம்மாதுறை பகுதியில் 20 பேருக்கும், களுவன்கேணி பகுதியில் 20 பேருக்கும், பலாச்சோலை பகுதியில் 13 பேருக்கும், வந்தாறுமூலை பகுதியில் 15 பேருக்கும், ஏறாவூர்-5 பகுதியில் 15 பேருக்கும், முறக்கொட்டாஞ்சேனை பகுதியில் 10 பேருக்கும், சாளம்பன்சேனை புணானை பகுதியில் 14 பேருக்கும், கிண்ணையடி பகுதியில் 20 பேருக்கும் உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் பிரதிநிதிகள் குறித்த கிராமங்களுக்கு சென்று உதவிகளை வழங்கி வைத்தனர்.