உள்ளுறைந்து ஆழ்ந்தகன்று அறியும் காலம்..

உள்ளுறைந்து ஆழ்ந்தகன்று அறியும் காலம்..

உலகத்தைப் படிக்கும் காலம்
உள்ளுறைந்து
உலகத்தைப் படிக்கும் காலம்…

மனிதர்கள் இல்லாதுபோகும் உலகை
கற்பனை செய்வது எளிதாகி வருகிறது….

அவலங்களும், அனர்த்தங்களும்
இயல்பான வாழ்க்கை ஆகிவிட்ட..
மனித சமூகங்களும்
ஆச்சரியமுறும் காலம்…..

குத்துமதிப்பாகவே, எதிர்க்கொள்ளப்பட்டு
வருகிறது ஆபத்து…

உலகத்தைப் படிக்கும் காலம்
உள்ளுறைந்து
உலகத்தைப் படிக்கும் காலம்…

கண்டம்விட்டு கண்டம் பாயும்
கோளம்தாண்டி கோளம் பாயும்
வித்தையறிந்த வீறாப்பு…

வரலாறு கொண்ட
கொள்ளை நோய்களை
கவனத்திற் கொள்ளாத செய்தி ஏதோ?

உலகத்தைப் படிக்கும் காலம்
உள்ளுறைந்து
உலகத்தைப் படிக்கும் காலம்….

ஆதிக்க நோக்கங்கள் ஆழ்ந்தகன்று அறிவோம்!
வாழ்வு செய்வோம் நல்வாழ்வு செய்வோம்!

உலகம் எல்லாம் தழைத்தோங்க
வாழ்வு செய்வோம்!
மனிதர் நாங்கள் வாழ்வு செய்வோம்!.

சி.ஜெயசங்கர்.