இலங்கையில் கொரோனாவால் நான்காவது மரணம் பதிவு.

0
207

IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 58 வயதான ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நபர் நிவ்மோனியா காரணமாகவே உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது.