இலங்கையில் கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்வு!

0
108

இலங்கையில் கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த கொவிட் 19 தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 

இதன் மூலம் நாட்டில் கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கையானது 150 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் கொவிட் 19 தொற்றுக்குள்ளான 21 பேர் குணமடைந்துள்ளதுடன் மூவர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.