ஆரையம்பதியில் வடிசாராயம் கைப்பற்று

0
183

ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் நிலையில், மட்டக்களப்பு – ஆரையம்பதி, மாவிலங்கத்துறையில், பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து 05 பரல் வடிசாராயத்தை,  காத்தான்குடி பொலிஸார், இன்று (02) கைப்பற்றியுள்ளனர்.

மாவிலங்கத்துறை வாவியில் படகொன்றில் ஏற்றியவாறு வடிசாராயம் கடத்தப்படுவதாக, அப்பிரசேத்திலுள்ள இளைஞர்களும் பொதுமக்களும் காத்தான்குடி பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து, காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி துமிந்த நயனசிறியின் தலைமையில் சென்ற பொலிஸார் குறித்த வடிசாராயத்தைக் கைப்பற்றியுள்ளனர்.

வடிசாராயத்தை, வாவியினூடாக மாவிலங்கத்துறைப் பகுதிக்கு கடத்திச் சென்றுகொண்டிருந்த போது, பொலிஸார் அங்கு வந்தமையால், சாராயத்தைக் கைவிட்டு, அதைக் கடத்திய நபர்கள் தப்பியோடியுள்ளனர்.

05 பரல்கள், 02 கலன்கள் வடிசாராயம், சாராயத்தை உற்பத்தி செய்யும் உபரணங்களையும் இதன்போது கைப்பற்றியுள்ளதாக, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

தப்பியோடிய நபர்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் காத்தான்குடி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.