கொரோனா பலியெடுத்த 3வது உயிர்.

 

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மருதானையைச் சேர்ந்த 72 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.இதன் மூலம் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது.

ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு சுகயீனம் காரணமாக சென்றிருந்த நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதையடுத்து கொழும்பு தொற்று நோயியல் வைத்தியசாலைக்கு (IDH) மாற்றப்பட்டுள்ளார்.

எனினும் கொழும்பு தொற்று நோயியல் வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு நான்கு மணி நேர தாமதம் ஏற்பட்டுள்ளது. அங்கு சிகிச்சை வழங்கப்பட்டு ஒரு மணி நேரத்தில் அவர் உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.