முனைத்தீவு ஆலயத்தினால் மக்களுக்கு நிவாரணம்.

 

(எருவில் துசி) கோரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக உலகே ஸ்தம்பிதமாகியுள்ள நிலையில் இலங்கையிலும் குறித்த வைரஸ் தாக்கத்தின் பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கத்திற்காக ஊரடங்கு சட்டத்தை இலங்கை அரசாங்கம் அமுல்படுத்தியுள்ளது.

இதனால் அன்றாடம் தினக்கூலிக்கு செல்லும் மக்கள் பெரிதும் பாதிப்பிற்குள்ளாகிய நிலையில் அவர்களுக்கான உலர் உணவுப்பொதிகளை மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட முனைத்தீவு ஸ்ரீ மாணிக்கபிள்ளையார் ஆலயம் மற்றும் ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய நிருவாக சபையும்இ திருப்பணிச்சபையும் இணைந்து முனைத்தீவு மற்றும் முனைத்தீவு சார் பட்டாபுர மக்களுக்கு 450இற்கும் மேற்பட்ட குடும்பங்களிற்கு ஆலய தொண்டர்களினால் இன்றைய தினம்(01.04.2020) மக்களிடம் கையளிக்கப்பட்டது.

இந் நிவாரணம் வழங்கி வைக்கும் பணியில் போரதீவுப்பற்று திட்ட இணைப்பாளர் மற்றும் போரதீவுப்பற்று வெல்லாவெளி பொதுச்சுகாதார பரிசோதகர் என பலரும் கலந்து கொண்டனர்.